சிதறிக் கிடக்கும் ஆபத்தான பொருட்களைக் கண்டால் அறிவிக்கவும்…!!

Read Time:1 Minute, 50 Second

imagesசலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, சிதறிய குண்டுகள் மற்றும் வெடி பொருட்களை பல்வேறு நபர்கள் சேகரித்துச் செல்வதாக, தகவல் கிடைத்துள்ளது என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு குண்டுகள் மற்றும் அவற்றின் பாகங்களை சேகரித்தல் மற்றும் வைத்திருத்தல் போன்றன, மக்களின் பாதுகாப்புக்கு பாதகத்தை ஏற்படுத்தும் தவறு என, பொலிஸ் தலைமையகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது போன்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறானவர்கள் மற்றும் குழுக்கள் குறித்த தகவல்கள் இருப்பின், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும், பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.

அத்துடன், சிதறிக்கிடக்கும் குண்டுகள் மற்றும் வெடி பொருட்களை தவறாக கையாண்டால், மக்கள் விபத்துக்கு முகாம் கொடுக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வாறான பொருட்கள் குறித்து விஷேட அதிரடிப்படையின் வெடிபொருள் செயலிழப்புப் பிரிவின், 011 3 046 128, 011 3 046 129, 011 2 580 518 அல்லது 077 730 3274 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரியப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்களில் ஏற்படும் கருவளையத்தைப் போக்கும் ஹஸ்த பாதாசனா- தினம் ஒரு யோகா..!!
Next post வங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்…!!