தலைமை ஆசிரியை கன்னத்தில் அறைந்த பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: கல்வி அதிகாரிகள் விசாரணை..!!

Read Time:2 Minute, 12 Second

201606021208158691_Education-authorities-take-action-on-teacher-for-slap-of_SECVPFதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் காட்டூர் ரோட்டில் அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோவையை சேர்ந்த சாஸ்திரி (வயது 54) என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

அதே பள்ளியில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவியை சேர்ந்த பாலச்சந்திரன் (30) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பள்ளியில் முதல் நாள் என்பதால் மாணவர் சேர்க்கைக்காக மாணவ–மாணவிகளும், பெற்றோர்களும் வந்திருந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தலைமை ஆசிரியர் சாஸ்திரியின் கன்னத்தில் ஆசிரியர் பாலச்சந்திரன் அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதனால் சத்தம் கேட்டு மற்ற ஆசிரியர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் ஆசிரியர் பாலச்சந்திரன், மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வேகமாக தப்பி விட்டார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை அவினாசி பாளையம் போலீசில் புகார் செய்தார். மேலும் இந்த சம்பவம் பற்றி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் பொங்கலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இன்றும் கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியை சாஸ்திரியிடம் விசாரணை நடத்தினர்.

தலைமை ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் பாலச்சந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி முதல்வரை திருமணம் செய்ய மறுத்ததால் மாணவி எரித்து கொலை..!!
Next post சாக்கடை தொட்டியில் சிக்கித் தவித்த குட்டி யானை மீட்பு…!!