இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி..!!

Read Time:2 Minute, 1 Second

201606020047551608_French-court-allows-widow-to-be-inseminated-with-dead_SECVPFஇறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதி
பாரிஸ் :

இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்று பிரான்ஸ் தலைமை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்பெயினை சேர்ந்த மரியானா கோமெஸ் தூரி என்ற பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார். இந்நிலையில் தனது கணவரின் விந்து அணுக்களை பாதுகாத்து வைத்திருந்த மரியானா அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவர் விரும்பினார்.

இவர்கள் இருவரும் பாரிசில் வாழ்ந்த வந்த போது இது தொடரபான பிரான்சின் சட்டம் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர். பிரான்சில் செயற்கை கருவூட்டல் என்பது மலட்டு ஜோடிகளுக்கு மட்டுமே நடைமுறையில் அதிகம் உள்ளது. இதனால் இவரின் விருப்பத்திற்கு எதிர்ப்பு வலுத்தது.

இந்நிலையில் சட்டங்கள் ஒருவரின் உரிமைகளை பறிக்க கூடாது என்று கூறி மரியானா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை ஒரு சிறப்பு வழக்காக எடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இறந்து போன கணவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அவருக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி பேசின்பிரிட்ஜ் பாலத்தில் இருந்து விழுந்த மாணவர் ரெயில் மோதி பலி…!!
Next post சூர்யா வாலிபரை தாக்கிய வழக்கில் திடிர் திருப்பம்..!!