டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து, கொன்றவர்களுக்கு மேலும் 10 ஆண்டு சிறை: தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு..!!

Read Time:3 Minute, 22 Second

timthumb (1)டெல்லியில் கடந்த 6-12- 2012 அன்றிரவு 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் ஒரு தனியார் பஸ்சில் பயணம் செய்தபோது அந்த பஸ்சில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை அடித்து தாக்கியது.

அந்த மாணவியின் நண்பரை பேருந்தில் இருந்து வெளியே வீசியது. அதன்பின் அந்த மாணவி ஓடும் பஸ்சுக்குள் கற்பழிக்கப்பட்டு கொடூர தாக்குதலுக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து அந்த மாணவி சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இந்த கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இளம்வயது குற்றவாளியான ஒருவன் மட்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டான்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, இவ்வழக்கில் தொடர்புடைய இளம் குற்றவாளி உள்பட 6 பேர் சேர்ந்து ராம் ஆதர் என்ற தச்சு தொழிலாளியை ஓடும் பஸ்சுக்குள் வைத்து அடித்துள்ளனர். அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றையும் பறித்து கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பான வழிப்பறி திருட்டு வழக்கில் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் 10 வருட சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1.01 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா என்ற மூன்றுபேரும் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். 3 பேரும் தங்களது மனுவில் கூறியுள்ளனர்.

மேற்கண்ட திருட்டு வழக்கு தொடர்பான விசாரணையின்போது தங்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அவர்கள் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள உத்தரவை ஒத்திவைக்கும்படி தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பத்தனம்திட்டாவில் தொழிலதிபரை சுட்டுக்கொன்று பிணத்தை எரித்த மகன் கைது…!!
Next post குரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்: அறிமுக வீடியோ..!!