சேலம் அருகே போலீஸ் ஜீப் மோதி பெண் பலி: கைதான பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாமீனில் விடுதலை…!!

Read Time:4 Minute, 25 Second

201605281504181079_police-jeep-collide-woman-death-arrested-police-inspector_SECVPFசேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ராஜாராம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி குணவதி (வயது 46).

இவர் தனது மகன் சந்தோசை (15) ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்த்து விட்டு தனது தம்பி சுப்பிரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை சுப்பிரமணியன் ஓட்டினார். அப்போது சுப்பிரமணியன் மகன் ஸ்ரீகுமரனும் உடன் வந்தார்.

சேலத்தை அடுத்த மல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்த போது பின்னால் வந்த போலீஸ் ஜீப் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுப்பிரமணியும், அவரது மகன் ஸ்ரீகுமரனும் தூக்கி வீசப்பட்டனர்.

குணவதி மட்டும் மோட்டார் சைக்கிளுடன் போலீஸ் ஜீப்பின் அடியில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த குணவதி சம்பவ இடத்திலேயே இறந்தார். சுப்பிரமணியன், ஸ்ரீகுமரன் ஆகிய 2 பேரும் லேசான காயங்களுடன் தப்பினர்.

தகவல் அறிந்த டி.எஸ்.பி. சுஜித்குமார், மல்லூர் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் போலீஸ் நிலைய ஜீப்பை சொந்த தேவைக்காக அவரே நாமக்கல்லுக்கு ஓட்டி சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. பின்னர் குணவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே குணவதியின் உறவினர்களும் அங்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் குணவதி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தி சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி.சுஜித்குமார் இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீஸ் ஜீப்பை போலீசார் எடுத்து செல்ல முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குணவதியின் உறவினர்கள் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யும் வரை ஜீப்பை எடுக்க விடமாட்டோம் என்று கூறி ஜீப் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டதுடன் கற்களை வீசி ஜீப்பின் பின்புற கண்ணாடியை உடைத்தனர்.

3 மணி நேரத்திற்கு பிறகு இன்ஸ்பெக்டர் ராமஆண்டவர் மீது மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன் பின்னர் குணவதியின் உறவினர்கள் கலைந்து சென்றனர். சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இன்ஸ்பெக்டர் ராம ஆண்டவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குணவதியின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக திருநங்கையர் அழகிப்போட்டி: 21 வயது தலீன் அபு ஹன்னா தேர்வு…!!
Next post பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி அடித்துக் கொலை