ஈரானில் விருந்து நடத்திய மாணவர்களுக்கு 99 சவுக்கடி தண்டனை…!!

Read Time:1 Minute, 30 Second

201605281501312199_99-students-Whiplash-sentence-in-Iran_SECVPFஈரானில் விருந்து நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் பாட்டத்துக்கு தடை விதிகப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு பகுதியில் உள்ள குயாஷ்வின் நகரில் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒரு பங்களாவில் கூடி விருந்து நிகழ்ச்சி நடத்தினர்.

ஆட்டம் பாட்டம் அமர்க்களப்பட்டது. அது இடையூறாக இருப்பதாக கூடி அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் விருந்தில் பங்கேற்ற 30 மாணவ மாணவிகளை கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது விருந்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் அரை நிர்வாண ஆடையுடன் இருந்ததாகவும், மது அருந்தி விட்டு கும்மாளமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்து.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்ப்படுகிறது. அதன் நன்னடத்தைக்கு எதிராக மாணவ, மாணவிகள் செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. எனவே, அவர்களுக்கு தலா 99 சவுக்கடி தண்டனையை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடனத்தில் பசங்களுக்கு போட்டியாக களமிறங்கிய பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை..!!
Next post விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்..!!