இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க..!!

Read Time:3 Minute, 52 Second

19-1463659230-4-drinking-teaநம்மில் ஏராளமானோர் நிம்மதியான தூக்கம் கிடைக்க பெறாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மனிதனுக்கு போதிய தூக்கம் கிடைக்காவிட்டால் அதனால் ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு முக்கிய காரணம் வாழும் மோசமான வாழ்க்கை முறையும், மன அழுத்தமும் தான்.

ஒருவருக்கு தூக்க பிரச்சனை இருந்து, அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். ஆகவே தூங்குவதில் பிரச்சனையை சந்தித்தால், அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

இங்கு இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடித்தால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

செர்ரி ஜூஸ்

இந்த செர்ரி ஜூஸை காலையிலும், இரவிலும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செர்ரியில் உள்ள அதிகப்படியனா மெலடோனின் என்னும் ஹார்மோன் தூங்கி-எழும் சுழற்சியை சீராக்கும்.

தேவையான பொருட்கள்

புளிப்பு செர்ரி பழச்சாறு – 1 கப்

வென்னிலா எசன்ஸ் – 2 துளிகள்

செய்முறை

காலையில் எழுந்ததும் ஒரு கப் புளிப்பு செர்ரி பழச்சாற்றினை பருக வேண்டும். ஆனால் இரவில் படுப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் 1 கப் புளிப்பு செர்ரி பழச்சாற்றுடன் 2 துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்ததுப் பருக வேண்டும். ஏன், காலையில் வென்னிலா எசன்ஸ் சேர்க்க வேண்டாமென்றால், அது உங்களை காலையிலேயே ரிலாக்ஸ் அடையச் செய்துவிடும். எனவே இரவில் மட்டும் சேர்ப்பது உகந்தது.

சீமைச்சாமந்தி டீ

இந்த டீயில் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் மற்றும் மனதை அமைதியடையச் செய்யும் இருவேறு முலிகைகள் உள்ளன. ஆகவே இரவில் இதனை ஒரு டம்ளர் பருகினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

சீமைச்சாமந்தி மொட்டுகள் – 1 டீஸ்பூன்

லாவெண்டர் மொட்டுகள் – 1 டீஸ்பூன்

சுடுநீர் – 1 கப்

தேன் – தேவையான அளவு

செய்முறை

ஒரு அகன்ற கப்பில் சீமைச்சாமந்தி மற்றும் லாவெண்டர் மொட்டுக்களைப் போட்டு, அதில் 1 கப் சுடுநீரை ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும்.

பால் மற்றும் தேன் தேவையான பொருட்கள்

பால் – 1 கப்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை

செய்முறை

முதலில் பாலை நன்கு காய்ச்சி இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் குளிர வைத்து, தேன் மற்றும் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து, இரவில் படுப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் பருக வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம்..!!
Next post அழகான கையெழுத்துக்காக விருது வாங்கிய கையில்லாத சிறுமி…!!