ஸ்பெல்லிங் பீ போட்டி: இளம்வயதில் வென்று சாதனை படைத்த இந்திய-அமெரிக்க சிறுவன்…!!

Read Time:2 Minute, 23 Second

201605271024111184_2-young-IndianAmericans-win-US-Spelling-Bee-in-historic-tie_SECVPFஅமெரிக்காவில் மாணவ-மாணவியரின் எழுத்துகூட்டி வாசிக்கும் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஸ்பெல்லிங் பீ போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

சுமார் ஒரு கோடி மாணவ-மாணவியர் இந்த ஆண்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் இறுதிச்சுற்றுக்கு 285 பேர் தேர்வாகியிருந்தனர்.

இறுதியாக பத்து பேருக்கு இடையில் ‘டைஅப்’ போட்டி நிலவியது. இதில் தாக்குப்பிடித்த ஏழுபேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த போட்டியின் 24-வது சுற்றில் ‘gesellschaft’ என்ற வாக்கியத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்துவரும் நிஹார் சாய்ரெட்டி ஜங்கா(11) என்ற இந்திய வம்சாவளி மாணவன் மிகசரியான உச்சரிப்புடன் எழுத்துக்கூட்டி வாசித்தான். இதன்மூலம் மிகச்சிறிய வயதில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவன் என்ற சாதனையை நிஹார் சாய்ரெட்டி ஜங்கா ஏற்படுத்தியுள்ளான்.

இதேபோல், நியூயார்க் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளி மாணவனான ஜெய்ராம் ஜகதீஷ் ஹத்வார்(13) ‘Feldenkrais’ என்ற வாக்கியத்தை மிகச்சரியான உச்சரிப்புடன் எழுத்துக்கூட்டி வாசித்தான். இதையடுத்து, ‘ஸ்கிர்ப்ஸ் ஹொவார்ட் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சுழற்கோப்பையையும், பரிசுத்தொகையான 38 ஆயிரம் டாலர் பணத்தையும் இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளி மாணவ-மாணவியரே அதிக அளவில் வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடியோ: கார்களுக்கு மேலே பாய்ந்து 1200 பேரை சுமந்து செல்லும் பஸ் – சீனாவில் இந்த ஆண்டு அறிமுகம்…!!
Next post எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு…!!