தீராத கழுத்து வலிக்கு தீர்வுக் காண இதையும் கொஞ்சம் யோசிக்கணும்…!!

Read Time:3 Minute, 25 Second

howtoavoidneckandbackpainஇன்று மக்கள் அதிகமாக அவதிப்படும் உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாக திகழ்வது கழுத்து, முதுகு, இடுப்பு வலி. இதை அதிகமாக கூறுவது சமூகத்தில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் தான். ஆம், கணினியின் முன்னே சிலையை போல அமர்ந்து ஒரே நேர் பார்வையில் விரல்களுக்கு மட்டும் வேலைக் கொடுத்து அமர்ந்திருந்தால் வேறு என்ன வரும்.

சிறு, சிறு விஷயங்களில் நீங்கள் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும், இந்த கழுத்து, முதுகு, இடுப்பு வலியில் இருந்து நீங்கள் நிரந்தர தீர்வுக் காண முடியும். அன்றாக வாழ்வில் கலந்திருக்கும் மொபைலில் துவங்கி, நீங்கள் உறங்க செல்லும் தருணம் வரை சிலவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு முழு தீர்வுக் காண ஊட்டச்சத்தும் அவசியம்.

மொபைல்

அதிக நேரம் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பதை முதலில் நிறுத்துங்கள். அதிலும், சிலர் படுக்கைக்கு சென்றுவிட்டாலும், ஒருபுறமாக மொபைல் வைத்தப்படியே நோண்டிக் கொண்டிருப்பார்கள். இதனால், கழுத்து வலி மட்டுமின்றி, உடல் அசதி, தூக்கமின்மை, சுறுசுறுப்பு குறைவு போன்றவையும் கூட உண்டாகும்.

உடற்பயிற்சி

முடிந்த வரை தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். எலும்புகளின் வலிமையை ஊக்குவிப்பது போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

வேலை

தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்து வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஐந்து நிமிடமாவது இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் வேலை செய்ய துவங்குங்கள்.

அமரும் நிலை

இன்று கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் பலரும் செய்யும் தவறு. சாய்வாக, சரியான நிலையில் அமராமல் வேலை செய்வது தான், முதலில் நேராக அமர்ந்து வேலை செய்யுங்கள். இதை பின்பற்றினாலே முதுகு வலி, கழுத்து வலி அதிகம் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

யோகா

யோகா செய்வது உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் மிகவும் நல்லது. இடுப்பு, முதுகு, கழுத்து வலியில் இருந்து தீர்வுக் காண யோகா ஒரு சிறந்த நிவாரணி.

உணவுகள்

எலும்புகளுக்கு வலுவளிக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக கால்சியம் மற்றும் காய்கறிகள் அதிகமாக உட்கொள்ளுங்கள். காய்கறிகளை வேகவைத்து உண்பது மிகவும் சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நபரின் திக் திக் நிமிடம்…!!
Next post சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: இந்தோனேசியாவில் புதிய சட்டம்…!!