சென்னையில் 106.16 டிகிரி வெயில்…!!
தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் காலம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சென்னையில் அன்றாடம் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி, மக்களை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கோடை மழையை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் சென்னையில் பலத்த மழை பெய்து வெப்பத்தை தணித்தது. அதன் பிறகு மீண்டும் வெயில் அதிகரித்தது.
‘அக்னி நட்சத்திரம்’ தொடங்கிய பிறகு அதிகபட்சமாக சென்னையில் நேற்று 106.16 டிகிரி வெயில் கொளுத்தியது. (நுங்கம்பாக்கத்தில் 105.44 டிகிரி, மீனம்பாக்கத்தில் 106.16 டிகிரி) காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
சாலைகளில் அனல் காற்று பலமாக வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினர். வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறிகள் வெப்ப காற்றையே உமிழ்ந்தன. மின்சார ரெயில், மாநகர பஸ்களில் பயணம் செய்த பயணிகள் வியர்வையால் குளித்தபடி சென்றனர்.
வறுத்தெடுத்த வெயிலால் ஏ.சி.பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இளநீர், தர்பூசணி, பழச்சாறு, ஐஸ்கீரீம் போன்ற உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. வெயிலுக்கு பயந்து பலர் பகல் வேளையில் பயணங்களை தவிர்த்தனர்.
வெளியே தலைக் காட்டாமல் பலர் வீட்டுக்குள்ளே முடங்கினர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து இளைப்பாறுவதற்காக மாலை நேரத்தில் கடற்கரைகள், பூங்காக்கள், சுற்றுலாதலங்களுக்கு பலர் படையெடுத்தனர்.
அக்னி நட்சத்திரம் 28-ந்தேதி(நாளை மறுதினம்) விடைபெற உள்ளதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்று அதிகபட்ச வெயில் பதிவாகி இருந்தாலும், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் 2 செ.மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating