இயற்கை வளம் அழிக்கப்படுவதால் அபூர்வ பறவை இனங்கள் காணாமல் போய்விடும்: இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை…!!

Read Time:4 Minute, 21 Second

201605231135497649_Rare-bird-species-destruction-of-natural-resources-are-lost_SECVPFஇயற்கை வளம் அழிக்கப்படுவதால் மனித இனத்திற்கு ‘நண்பனாக’ விளங்கிய பல பறவைகள் மாயமாகி விட்டது.

‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா…’ என திரைப்பட பாடல் நம் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான்இருக்கிறது. ஆனால் அந்த சிட்டுக்குருவியை தான் நம்மால் பார்க்க முடியவில்லை. கரிச்சான், மைனா, காட்டுபுறா, சிரகி, தாரா, உள்ளான், வெள்ளை கொக்கு போன்ற பல்வேறு வகையான பறவை இனங்கள் ஆயிரக்கணக்கில் இருந்து வந்தது.

இந்த வகையான பறவைகள் நடமாட்டம் இல்லாததால் அழிந்து விட்டதோ என்ற அச்சமும், அழிந்து வருகிறதோ என்ற கவலையும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு மனைகளாகவும், பாலங்களாகவும், சாலைகளாகவும் மாறியது. பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான சூழ்நிலைகள், தங்கும் வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுச்சூழலின் பாதுகாவலனாக விளங்கிய பறவையினங்கள் அழிக்கப்பட்டும், அழிந்தும் வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

தொற்று நோய் பரப்பும் இறைச்சி கழிவுகளை அகற்றும் பிணம் தின்னி கழுகுகள், காடு, வயல்வெளி மற்றும் பரந்து விரிந்த குப்பைமேடு உள்ளிட்ட திறந்த வெளிகளில் அழுகி கிடக்கும் எலி முதல் மாடுகள் உள்ளிட்ட பல்வேறு இறைச்சிகளை தின்று வந்த துப்புரவு பணி மேற்கொண்ட வல்லூறுகள். தேள், பூரான், விஷ வண்டுகளை காலி செய்யும் காடை, கரிச்சான் போன்ற பறவைகள், வீட்டுக்கு வீடு செல்ல பறவையாக வளர்ந்த மைனா போன்ற இனங்கள் அழிந்து விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மனிதனுக்கு மருத்துவ ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் உதவிய அற்புத பறவையினங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போய்விடும் நிலை காணப்படுகிறது.

காடுகளிலும், வயல்களிலும் தோகை விரித்து ஆடி திரிந்த மயில்களும், வெளிநாட்டில் இருந்து இரை தேடி வரும் பொன்னி குருவிகளும் உணவுக்காக வேட்டையாடப்படுகிறது. பொன்னி குருவிகள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இப்படி பல்வேறு இடையூறுகளின் காரணமாக பறவைகள் இனமே காணாமல் போய்விட்டது. வீடுகளிலும் ,தோப்புகளிலும் மக்கள் புறாக்களை மட்டும் வளர்த்து வருகின்றனர். கண்மாய்களில் காணப்பட்ட கொக்குவும் தற்போது காண முடியவில்லை. வேட்டை முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில் பறவைகள் இனமே அழிந்து விட்டது. பறவைகளின் நடமாட்டத்தின் போது சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவவில்லை. இயற்கை வளம் அழிக்கப்பட்டதன் எதிரொலியாக பறவைகளின் நடமாட்டம் குறைந்தது.

மொபைல் டவர் கதிர் வீச்சுக்களின் தாக்குதலில் பறவை இனம் அழிந்து விட்டது. குளத்தில் தவளை கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சனி பகவானின் வாகனம் என்றழைக்கப்படும் காக்கைகள் இனமும் அழிந்து வருகிறது. ‘இயற்கையை காப்போம்’ என்பதை சொல்லளவில் இல்லாமல் செயலளவில் காட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லாவரத்தில் டிரைவருக்கு கத்திகுத்து: 4 பேர் கைது…!!
Next post கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வெல்லம் கடத்திய லாரி பறிமுதல்…!!