அமெரிக்காவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்…!!

Read Time:2 Minute, 7 Second

201605211205503680_CDC-monitoring-pregnant-women-with-Zika-in-US-states_SECVPFஅமெரிக்காவில் ‘ஜிகா’ வைரஸ் நோய் வேகமாக பரவுகிறது. அங்கு 157 கர்ப்பிணிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் நோய் கடுமையாக பரவியது. மலேரியாவை பரப்பும் ‘ஏடிஸ்’ என்ற கொசு மூலம் இந்த நோய் பரவுகிறது. கர்ப்பிணிகளை தாக்கும் இந்த நோயினால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கும். இதனால் சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

இந்த நோயை தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரவி வரும் ‘ஜிகா’ வைரஸ் தற்போது அமெரிக்காவுக்குள் மிக வேகமாக ஊடுருவியுள்ளது.

அங்கு 279 கர்ப்பிணி பெண்கள் ‘ஜிகா’ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 157 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். மேலும் 122 பேர் பியூர்டோ ரிகா பகுதியை சேர்ந்தவர்கள். இது அமெரிக்காவின் தன்னாட்சி உரிமை பெற்ற யூனியன் பிரதேசம் ஆகும்.

‘ஜிகா’ வைரஸ் நோய் பரவி வருவது அமெரிக்காவில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவது குறித்து அதிபர் ஒபாமா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை அதிபர் ஜோபிடனும் பங்கேற்றார். அப்போது ‘ஜிகா’ வைரஸ் நோயை பரவாமல் தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரநாயக்கவில் ஏற்படும் மண்சரிவினால் செஞ்சிலுவைச் சங்க நலன்புரி முகாம் இடமாற்றம்..!!
Next post காசிமேட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு…!!