பல லட்சம் ரூபா மோசடி செய்த இளம்பெண் யாழில் கைது…!!
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட பணம், நகைகளை கொள்ளையிட்டு தலைமறைவானார்.
இதன்காரணமாக குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேகநபரான குறித்த இளம்பெண்ணான தேனுகா ரவீந்திரன் வயது 22 யாழ்.நகரப்பகுதியில் நேற்று முன்தினம் மற்றுமொரு இளைஞருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தி திருமணம் வரையில் சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகமடைந்த குறித்த பெண்ணை காதலித்த நபர் அப்பெண்ணிடம் ஊடகங்களில் அண்மையில் உங்கள் புகைப்படம் வந்ததாக குறிப்பிட்டார். அதற்கு அந்தப் பெண் ஊடகங்கள் தவறுதலாக தனது புகைப்படங்களை பிரசுரித்ததாக தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த அந்நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அப்பெண்ணை பலவந்தமாக அழைத்துச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட குறித்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தான் கொள்ளையடித்த நகைகள் தொடர்பான சகல விடயங்களையும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்ட குறித்த இளம் பெண் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியிருந்தனர்.
அத்துடன் இந்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating