ரூ. 2075 கோடிக்கு ஏலம்போன அபூர்வ வைரம்…!!

Read Time:1 Minute, 34 Second

201605181446169028_Pink-diamond-sells-for-record-USD-31-6-mn-at-Geneva-auction_SECVPFசுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இளம்சிவப்புநிற அபூர்வ வைரம் 31.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம்போய் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பிரபலமான சோத்பைஸ் ஏல நிறுவனம் வரலாற்று சிறப்பும், கலையம்சமும் கொண்ட பொக்கிஷங்களை அவ்வப்போது ஏலத்தில் விடுகிறது. உலகின் பல முக்கிய நகரங்களில் இதுவரை நடைபெற்றுள்ள இந்நிறுவனத்தின் பல ஏலங்களில் பலகோடி டாலர்கள் மதிப்பிலான கலைப் பொக்கிஷங்கள் கைமாறியுள்ளன.

அவ்வகையில், இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த அரியவகை பொக்கிஷங்களை கடந்த மே மாதம் சோத்பைஸ் ஏலம் விட்டது. இதில் விலைபோகாமல் இருந்த இளம்சிவப்புநிற வைரம் நேற்று ஏலத்தில் விடப்பட்டது. 15.38 கேரட் எடைகொண்ட இந்த வைரம் 31.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு 2075 கோடி ரூபாய்) ஏலம் போனது.

அதுமட்டுமின்றி, இதர கலைப்பொருட்களுடன் சேர்த்து நேற்று ஒரேநாளில் 175.09 மில்லியன் டாலர் அளவுக்கு இந்நிறுவனம் வர்த்தகம் செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கார் மோதி தூக்கி வீசப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்கள்: திக் திக் வீடியோ…!!
Next post சவுதி அரேபியா: திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்…!!