காட்டுத் தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் விட்டுச் சென்ற வாகனங்கள் மீள கையளிப்பு..!!

Read Time:2 Minute, 19 Second

timthumb (2)அல்பேர்டாவின் ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் காட்டுத் தீயினால், இடம்பெயர்ந்த மக்கள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்ததையடுத்து, பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, பெருமளவானோர் தமது வாகனங்களை ஆங்காங்கே கைவிட்டுவிட்டு, வேறு மார்க்கங்கள் ஊடாக வேகமாக இடம்பெயரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர்.

இதனால் நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும், இரு திசை நோக்கிய வழித்தடங்களுக்கு நடுப் பகுதியிலும் ஏராளமான வாகங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இவ்வாறு கைவிடப்பட்ட வாகனங்களை மீட்டெடுத்து, உரியவர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அல்பேர்ட்டா போக்குவரத்து திணைக்களத்தின் தொடர்பாடல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஃபோர்ட் மெக்முர்ரேக்கு தென்புறமாக நெடுஞ்சாலை 63 பகுதியில் இருந்து மாத்திரம் இதுவரை சுமார் 101 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அந்த வாகனங்கள் எட்மண்டனுக்கு வடக்கே சுமார் 230 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள Wandering River பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த அந்த பகுதிக்கு நேரில் சென்று தங்களின் வாகனங்களை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆவி மகனுக்கு பெண் பிணத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!!
Next post தமிழக தேர்தல் – 74% வாக்குப்பதிவு – முழு விபரம் இதோ…!!