19 ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிர்வாழும் கடைசி நபர்…!!

Read Time:1 Minute, 45 Second

16659_oldd1800 களில் பிறந்த உலகின் கடைசி நப­ரான பெண்­ணொ­ருவர் இத்­தா­லியில் வசிக்­கிறார்.

எம்மா மொரானோ எனும் இப்பெண் 116 வய­தா­னவர். உலகின் மிக வய­தா­ன­வ­ரா­கவும் இவர் விளங்­கு­கிறார்.

அதே­வேளை, 19 ஆம் நூற்­றாண்டில் பிறந்து உயிர்­வாழும் உலகின் ஒரே­யொரு மனி­தரும் இவரே.

இவ­ருக்கு முன் உலகின் மிக வய­தா­ன­வ­ராக விளங்­கிய அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சுசான்னா முஷாத் ஜோன்ஸ் கடந்த வியா­ழக்­கி­ழமை இறந்தார்.

சுசா­னா­வை­விட நான்­கரை மாதங்கள் இள­மை­யா­னவர் எம்மா மொரானோ. இவர் 1899 நவம்பர் 29 ஆம் திகதி பிறந்­தவர். இத்­தா­லியின் வட பிராந்­திய நக­ரான வேர்­பா­னி­யாவில் இவர் வசிக்­கிறார்.

சிறு பரு­வத்தில் தான் நோயொன்­றினால் பாதிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து தினமும் பச்சை முட்டை உட்­கொண்டு வரு­வ­தாக அவர் கடந்த வருடம் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இத்­தா­லியின் மத்­தி­யத்­த­ரைக்­கடல் தீவான சார்­டீ­னி­யாவில் 100 வயதைக் கடந்த பலர் வசிக்­கின்­றனர். 105 வய­தா­ன­வர்கள் பலர் உள்­ளனர்.

அவர்­களின் நீண்ட கால ஆயுள் இர­க­சியம் குறித்து இத்­தா­லியின் மிலான் பல்­க­லைக்­க­ழகம் ஆய்­வொன்றை மேற்­கொண்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் பலி..!!
Next post மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி..!!