தனது வீட்டின் அழகு பாதிக்கும் என்பதால் தந்தை வீட்டை தரைமட்டமாக்கிய மகள்…!!

Read Time:3 Minute, 11 Second

timthumb (5)காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தந்தை ஒருவரின் வீட்டை மகள் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தந்தை சிறிய பழைய வீட்டில் வசித்து வருவதனை கௌரவக் குறைவாக கருதிய மகள் தந்தை வீட்டில் இல்லாத போது வீட்டை டோசர் கொண்டு தரை மட்டமாக்கியுள்ளார்.

கரந்தெனிய, பஹல மானன என்னும் பிரதேசத்தில் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் மகளுக்கு வீடு அமைத்துக் கொள்ள தந்தை காணியை மகளின் பெயரில் எழுதி, ஒரு பகுதி காணியில் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

குறித்த மகள், தந்தை வழங்கிய காணியில் அதி சொகுசு அழகிய வீடு ஒன்றை நிர்மானித்துள்ளார்.

தந்தையின் பழைய சிறிய வீட்டினால் தமது ஆடம்பர வீட்டின் அழகு கெடுவதனால், தந்தையின் வீட்டை இடித்துவிட மகள் திட்டமிட்டார்.

தந்தை வீட்டில் இல்லாத போது அவரது உடமைகள், உடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் சிறிய வீட்டில் இருந்த நிலையில் புல்டோசர் ஒன்றை தருவித்து அந்த வீட்டை தரைமட்டமாக்கியுள்ளார்.

வீடு திரும்பிய தந்தை இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இது குறித்து மகளிடம் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்,

சிறிய பழைய வீடு தமது வீட்டின் அழகை பாதிப்பதாகவும் அதனால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியதாகவும் மகள் பதிலளித்துள்ளார்.

இதனால் சமாதானம் அடையாத தந்தை, இது குறித்து கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையை தமது வீட்டில் வந்து குடியேறுமாறு மகள் கோரியுள்ளார். எனினும் அந்தக் கோரிக்கையை குறித்த தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

மகளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லால் சந்திரசிறி, இந்தப் பிரச்சினையை மகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

பின்னர், புதிய வீடு ஒன்றை நிர்மாணிக்க நான்கு லட்சம் ரூபா தந்தைக்கு வழங்குவதாக மகள் உறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யாமல் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தந்தையும் மகளும் வீடு திரும்பியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்படையினரின் தளத்தை தாக்கிய கனமழை..!!
Next post இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு – பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!