“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -2)

Read Time:20 Minute, 3 Second

timthumb (2)பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்த யுத்தத்துக்கு பின்னான அபிவிருத்தி முயற்சிகளில் எங்கேயோ ஏதோ குறைபாடு உள்ளது போலத் தெரிகிறது.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உரிய நடைமுறைகளின்படி சந்தேகத்தின் பெயரில் நபர்களைக் கைது செய்வதற்கான உரிமை உள்ளது.

அங்கும்கூட தற்போது நடைபெறும் கைதுகளுக்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்களது குறிப்பாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ கிழக்கு தலைவர்கள் பற்றிய கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தார்களா என்கிற சந்தேகம் எழுகிறது.

காவல்துறை தரப்பினரால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகளினால் இந்த சந்தேகம் மேலும் விரிவடைந்துள்ளது.

காவல்துறை தரப்பினரை மேற்கோள் காட்டி சில செய்தி அறிக்கைகள் தெரிவித்திருப்பது, கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு புலிகள் முழுமையான புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பெற்றிருக்கவில்லை மற்றும் அவர்கள் இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் வழங்குபவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்று.

அத்தகைய அறிக்கைகள் மூலம் தெளிவாக தெரிவது யாதெனில்.., முன்னாள் கிழக்கு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் கைதுகளுக்கு பின்னால் உள்ள அதிகாரிகள் வருந்தத் தக்க வகையில் போருக்கு பின்பு ராம், நகுலன், கலையரசன், மற்றும் பிரபா ஆகியோர் பங்களித்த குறிப்பிடத்தக்க பாத்திரங்களைப பற்றி முற்றாக அறிந்திருக்கவில்லை என்பதையே.

இந்த நால்வரும், ஸ்ரீலங்கா அரசாங்கமும் மற்றும் அதன் முகவர்களும் பெருமைப்படத் தக்க விதத்தில் புலிகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் நடந்தது இதுதான்..

எல்.ரீ.ரீ.ஈ தோல்வியடைந்து அதன் பெருந் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 2009ல் கொல்லப்பட்ட வேளையில், ஒரு படைப்பிரிவான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அம்பாறை மாவட்டத்தின் காடுகளான கஞ்சிகுடிச்சான்சாறு மற்றும் காஞ்சிரங்குடா பகுதிகளில் இன்னும் சுதந்திரமாக மற்றும் போராடும் நிலையில் இருந்தார்கள்.

அவர்களுக்குத் தலைமை தாங்கியவர்கள், எல்.ரீ.ரீ.ஈயின் அம்பாறை – மட்டக்களப்பு இராணுவத் தளபதியான கேணல் ராம் மற்றும் துணைத் தளபதி லெப்.கேணல் நகுலன் ஆகியோர்கள்.

எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் சுற்றிவளைப்பு தேடுதலை உடைத்துக் கொண்டு தப்பிக்கத் திட்டம் தீட்டியபோது, அவர் தங்குவதற்கு மாற்றீடான பிரதேசங்களில் ஒன்றாக அவர் மனதில் தோன்றியிருந்தது கஞ்சிகுடிச்சான்சாறு காடுகளே.

எனினும் இது நடைபெறாததுடன் பிரபாகரனும் கொல்லப்பட்டார்.

வடக்கில் புலிகளுக்கு ஏற்பட்ட இராணுவத் தோல்விகளுக்குப் பின்னர், இராணுவப் படைகளும் பொலிஸ் விசேட பணிப்படை பிரிவினரும் (எஸ்.ரி.எப்) அம்பாறை மாவட்டத்தில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள்மீது அழுத்தத்தை அதிகரிக்க ஆரம்பித்தார்கள்.

எனவே ராம், நகுலன் மற்றும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ போராளிகளும் மேலும் வடக்கு பக்கமாக குடும்பிமலை/ தொப்பிகல காடுகளை நோக்கி நகர்ந்தார்கள்.

தொடர்ச்சியான இராணுவ அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதை தொடர்ந்து ராம் மற்றும் நகுலன் ஆகிய இருவரும் ஏனைய அங்கத்தவர்களை கலைந்து செல்லும்படி பணித்துவிட்டு படுவான்கரை பகுதியில் உள்ள வெல்லாவெளி பிரதேசத்துக்குள் சென்று மறைந்திருந்தார்கள்.

இதற்கிடையில் வெளிநாட்டுப் புலிகளின் கிளைகளுக்கு இவர்கள் இருவரிடமிருந்தும், தாங்கள் சரணடையவில்லை என்றும் கிழக்கிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த மேலும் உதவிகள் தேவை என்று விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எல்.ரீ.ரீ.ஈயின் மட்டக்களப்பு – அம்பாறை புலனாய்வுத் தலைவர் லெப்.கேணல் பிரபா, இறுதிக்கட்ட போரின்போது வன்னியில் இருந்தார்.

ஏப்ரல் மாதமளவில் அவர் புதுக்குடியிருப்பு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்தார், எல்.ரீ.ரீ.ஈ முற்றாகத் தோற்கடிக்கப் படுவதற்கு முன்பு அவர் சில புலி அங்கத்தவர்களுடன் சேர்ந்து நெடுங்கேணி காட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்திருந்தார்.

பிரபா, அதன்பின் வவுனியா நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பான மறைவிடத்திற்கு நகர்ந்தார்.

பிரபா

பிரபாவின் திருகோணமலை மாவட்ட சகாவான கலையரசன் என்கிற அறிவழகன் அந்தச் சமயத்தில் திருகோணமலை மாவட்ட கிளிவெட்டி பிரதேச காடுகளுக்குள் பதுங்கியிருந்தார்.

மட்டக்களப்பு – அம்பாறை எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வு தலைவரான பிரபா, திருகோணமலை எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வு பிரிவின் தலைவரான கலையரசனுடன் ஒருபக்கமும் மற்றம் ராம் – நகுலன் இரட்டையர்களுடன் மறுபுறமும் இரகசியமான தொடர்புகளை பேணி வந்தார்.

மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட எதிர் புலனாய்வு சாதனை

இந்தக் நேரத்தில்தான் ஸ்ரீலங்காவின் புலனாய்வு அதிகாரிகள் ஒரு திறமையான எதிர் புலனாய்வு சாதனையை மூன்று கட்டங்களாக நடத்தினார்கள்.

அதன் முதல்கட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் கலப்பு பெற்றோர்களைக் கொண்ட அவரது பெயர் அங்கில எழுத்தான ‘ரி’ என்பதில் ஆரம்பமாகும் ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரை, திருகோணமலை புலிகள் புலனாய்வு தலைவர் கலையரசனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவரைத் தம்பக்கம் இழுப்பதற்கு புலனாய்வாளர்கள் பயன்படுத்தினார்கள்.

இரண்டாவது கட்டத்தில், வவுனியாவில் உள்ள பிரபாவை பொறியில் சிக்க வைக்கவும் அதன்மூலமாக அவரை வெற்றி கொள்ளவும் கலையரசன் பயன்படுத்தப் பட்டார்.

மூன்றாவது கட்டத்தில் வெல்லாவெளியில் உள்ள ராம் மற்றும் நகுலனை புகழ்ந்து மோசம் செய்யவும் மற்றும் அவர்களைப் பிடிக்கவும் பிரபா திறமையாகப் பயன்படுத்தப் பட்டார்.

நான்கு மூத்த கிழக்கு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் தங்கள் பிடியில் இருந்தபோதும், ஸ்ரீலங்கா புலனாய்வு நபா்கள் அந்த உண்மையை வெளிப்படுத்தவில்லை. மாறாக மரபு வழிக்குப் புறம்பான ஒரு இரகசிய செயற்பாட்டை அவர்கள் அரம்பித்தார்கள்.

ராம், நகுலன், பிரபா, கலையரசன் மற்றும் சில கிழக்கு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் சுயமாக இயங்கி வருகிறார்கள் மற்றும் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்கிற ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.

ராம் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கிளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிதி மற்றும் ஆயுத உதவிகளைக் கோரினார்.

ஒரு பெரிய அளவிலான பணம் ஒப்பந்த தொகையாக அனுப்பப்பட்டதாகச் சொல்லப்பட்டது ஆனால் அது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.

ராம் மேலும் அறிக்கைகளை வெளியிட்டதுடன் மற்றும் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள், நெடியவன் என்கிற பேரின்பராசா சிவபரனுடன் மோதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் கேபி என்கிற செல்வராசா பத்மநாதனுக்கு ஆதரவாகக்கூட ராம் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.

இந்த வேளையில்தான் அம்பாறை – மட்டக்களப்பு எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தயாமோகன் மலேசியாவுக்குச் சென்று அங்கிருந்து சுவிட்சலாந்துக்கு சென்றார்.

ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினரால் பின்பற்றப்பட்ட உபாயங்களில் ஒன்றாக “எல்.ரீ.ரீ.ஈ கிழக்கில் போராட்டம் நடத்துகிறது” என்கிற கட்டுக்கதையை விருத்தி செய்வதற்காக புலிகளின் முகாம்கள் காடுகளில் இருப்பதாக காட்டுவதற்காக ‘கள்ள முகாம்கள்’ உருவாக்கப்பட்டன.

சில இந்திய மற்றும் பாகிஸ்தான் ஊடகவியலாளர்கள் இந்த முகாம்களுக்குச் செல்லவும் கேணல் ராம் மற்றும் லெப்.கேணல் நகுலன் ஆகியோருடன் நேர்காணல் நடத்தவும் அனுமதிக்கப் பட்டார்கள்.

இந்த நேர்காணல் மற்றும் கட்டுரைகள் மதிப்பு மிக்க செய்திகளாக பெருமையுடன் பிரசுரிக்கப் பட்டன.

கிழக்கில் புலிகள் இன்னும் தீவிரமாய் போராடி வருகிறார்கள் என்று அதில் சொல்லப்பட்டது. அதிகம் ஏமாற்றப்பட்டது தமிழ் இதழ்களில் ஒன்றான நக்கீரன் எனும் வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகைதான், அது தன்னை முதல்தர புலனாய்வு இதழ் என விளம்பரப்படுத்தி வருகிறது.

ஏமாற்றத்தின் உச்சக்கட்டமாக இருப்பது கௌரவமான ஒரு ஐக்கிய இராச்சிய வெளியீட்டில் இதுபற்றி ஒரு பிரத்தியேகமான கட்டுரை வெளியானதுதான். அதன் ஆசிரியர் ஒரு உயர்குல மேல்தட்டு ஆங்கில சமூகத்தை சேர்ந்தவர், பிரபு ஒருவரின் மகளை மணம் செய்துள்ள உன்னதமான ஊடகவியலாளர் ஆவார்,

புலிகள் கிழக்கில் போராட்டத்தை தொடர்கிறார்கள் என்கிற மாயை மூலமாக புலனாய்வு அதிகாரிகளுக்கு ராம் குழுவினரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு மற்றும் பல இடங்களிலுமுள்ள அதன் இரகசிய ஆதரவாளர்களுடன் தொடர்புகளை பேணவும் சிறிது காலத்துக்கு உதவியது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு வெளிநாட்டு புலிகள் பற்றிய விரிவான தகவல்களையும் மற்றும் அதன் முக்கிய செயற்பாட்டாளர்கள் பற்றிய அடையாளங்களையும் திரட்ட இது உதவியாக இருந்தது.

எனினும் இது அதிக காலத்துக்கு நீடிக்கவில்லை மற்றும் செப்ரம்பர் 2009 மத்தியில், புலம்பெயர் புலி உறுப்பினர்கள் இடையே ராம் உண்மையிலேயே சுயாதீனமாய் இயங்குகிறாரா அல்லது இல்லையா என்கிற சந்தேகம் படிப்படியாக வளரத் தொடங்கியது.

நவம்பர் 2009ல் இந்த நாடகம் ஒரு முடிவக்கு வந்தது. பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள் காட்டி ஸ்ரீலங்கா செய்தி அறிக்கைகள், ராம் மின்னேரியா பாதுகாப்பு முகாமிலிருந்து நவம்பர் 5ல் தப்பி ஓடிவிட்டார் என்று தெரிவித்தன.

ஒரு இரண்டாவது அறிக்கை நவம்பர் 10ல் அவர் மீண்டும் பிடிபட்டார் என தெரிவித்தது. ராம் தானே வெளிநாட்டிலுள்ள புலிகளுடன் தொடர்பு கொண்டு இந்த செய்தி அறிக்கைகள் தவறானவை என்றும் தான் இன்னமும் சுதந்திரமாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.

நவம்பர் 27 மாவீரர் நாளன்று கேணல் ராம் சார்பாக ஒரு விசேட செய்தியும் வெளியிடப்பட்டது.எனினும் இந்த கூத்தில் சில சவால்களும் இருந்தன.

நவம்பர் மாதம் முடிவடையும் வேளையில் இந்த ஏமாற்று எதிர் – புலனாய்வு நடவடிக்கை அதன் பயனை இழந்துவிட்டது தெளிவாகத் தெரிந்தது. எல்.ரீ.ரீ.ஈ கிழக்கில் போராட்டம் நடத்துகிறது என்கிற மாயை படிப்படியாக சிதைவுற அனுமதிக்கப்பட்டது.

ராம், நகுலன், பிரபா மற்றும் கலையரசன் உட்பட்ட உயர்மட்ட கிழக்கு மாகாண புலிகள் மேலும் சில வருடங்களுக்கு வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலித் தலைவர்களுடன் தொடர்பு கொண்ட அதிகாரிகள், இறுதியாக முன்னாள் புலிகள் உண்மையில் ஒரு புதிய அத்தியாத்துக்கு திரும்பிவிட்டார்கள் என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

அவர்கள் எப்போதாவது விடுவிக்கப்பட்டால் அவாகள் ஒரு இயல்பு வாழ்க்கையை வாழ்வார்கள் என்கிற உறுதியேற்பட்டதால், அவர்களை விடுவிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

இறுதியில் 2013 ஜூலை – ஆகஸ்டில் அவர்கள் ஒரு 45 நாள் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்பட வேண்டியிருந்தது. முன்னாள் புலித் தலைவர்கள் வழங்கிய விரிவான ஒத்துழைப்பு காரணமாக கட்டாயமான ஒருவருட புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அவர்கள் உட்படத் தேவையில்லை என்கிற உணர்வு அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருந்தது.

பின்னர் அவர்கள் ஆகஸ்ட் 2013ல் விடுதலை செய்யப்பட்டு தனித்தனியாக அவர்களின சொந்தக் குடும்பத்தினருடன் முறைப்படி ஒப்படைக்கப் பட்டார்கள்.

விடுதலை செய்யப்பட்டவுடன் கிழக்கின் முன்னாள் புலித் தலைவர்கள் அவர்களின் புனர்வாழ்வளிக்கப்பட்ட ஏனைய சகாக்களைப் போல தங்கள் வாழ்க்கைக்கான வேலையை தேர்ந்தெடுத்து வாழ்க்கை மீள ஆரம்பித்தார்கள்.

தனது மனைவியையும் குழந்தைகளையும் இழந்திருந்த ராம் மீண்டும் திருமணம் செய்து திருக்கோவிலில் தனது குடும்ப மரபுத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்.

பிரபா தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் குடும்ப வாழ்ககையை மீண்டும் தொடர்ந்தார். நிதி நிலமை காரணமாக சிறிது காலம் போராடியதின் பின்னர் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி உணவகத்தின் ஒப்பந்தம் கிடைத்ததின் பின்னர் அவரது வாய்ப்புகள் பிரகாசிக்கத் தொடங்கிற்று.

கலையரசன் திருமண பந்தத்தில் இணைந்து திருமலை நகரத்துக்கு இடம்பெயர்ந்ததுடன் பால்பண்ணை வியாபாரம் மற்றும் கால்நடை வளர்ப்பு என தொழில்கள் தொடங்கினார்.

நகுலன் கிழக்கை விட்டு வடக்கில் நீர்வேலியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அவர் ஒரு பாடசாலை ஆசிரியை திருமணம் செய்ததுடன் வாழைப் பயிர்செய்கையில் ஈடுபட்டதுடன் மற்றும் வாழைப்பழ மொத்த வியாபாத்திலும் இறங்கினார்.

அவர்கள் வாழ்வு இப்போது சிதைந்துவிட்டது. இந்த நான்கு முன்னாள் புலித் தலைவர்களும் காவலில் வைக்கப்பட்டு இராணுவ புலனாய்வாளர்களுடன் ஒத்துழைத்ததைப் பற்றி சமூகம் நன்கு அறியும்.

மேலும் அறிய முடிவது என்னவென்றால் ஏனைய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களைப் போலவே இவர்களும் சாதரண வாழ்க்கையை மீள ஆரம்பித்து அதை முன்னெடுக்க முயற்சித்து வந்தார்கள்.

புலம்பெயர் புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் மத்தியில் உள்ள வெகு சிலரே எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு பெரிய அளவில் சாத்தியம் என நம்புகிறார்கள்.

புலம்பெயர் சமூகத்திலுள்ள புலி உறுப்பினாகளின் முயற்சிகளுக்கு மாறாக ஸ்ரீலங்காவில் வாழும் மக்களுக்கு எந்த வகையிலும் ஒரு அரசியல் வன்முறையை மீள ஊக்குவிப்பதில் சற்றும் ஆர்வம் கிடையாது.

அதன்படி பெருமளவில் சமூகம் முன்னாள் புலி தலைவர்களினால் எந்தவிதமான அச்சுறுத்தலோ அல்லது ஆபத்தோ உருவாகும் என எண்ணவில்லை. எனினும் பொதுவாக முன்னாள் புலி தலைவர்களுடன் இடை பழகுவதில் மக்கள் பக்கத்தில் குறிப்பிட்டளவு தயக்கம் இருந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயகம் திரும்பினார் ஜனாதிபதி…!!
Next post மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவனுக்கு 20 சவுக்கடி: சவுதி கோர்ட் தீர்ப்பு…!!