பெண்களுக்கு பிடிக்கும் பிங்க் நிறத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்…!!

Read Time:3 Minute, 18 Second

pink_dress002.w540பிங்க் கலர் டெடி, பிங்க் கலர் சுடி, பிங்க் கலர் ஸ்லிப்பர் என இங்கி பிங்கி போடாமலே பெண்கள் பலரும் ‘டிக்’ செய்வது பிங்க் கலர் பொருட்களைதான். அட இவ்வளவு ஏங்க, பொண்ணுங்களுக்கு பெட் நேம் பார்த்தா அதுவும் பிங்க்கி…. அப்படி என்னதான் இருக்கிறது அந்த பிங்க் கலரில்..?

ஏன் இந்த பிங்க் மீதான தீரா காதல்..?

* மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரது முகம் பிங்க் கலரில் மாறுவதை காணலாம். சோ.. பிங்க் என்றாலே பல பெண்களுக்கு மகிழ்ச்சியின் நிறமாக இருக்கிறது.

* பெண்களுக்கு பொதுவாக தங்கள் உதடுகளை அதிகமாக ரசிக்கும் பழக்கம் இருக்குமாம்.. பிங்க் கலர் லிப்ஸ் கூட இந்த பிங்க் மீதான மோகத்திற்கு காரணமாக இருக்கலாம்.

வசீகரமான நிறம்…?

* என்னதான் பெண்களுக்கு பிங்க் ஃபேவரைட்டாக இருந்தாலும், பிங்க் கலர் டிரஸ் போட்ட பெண்கள் எப்போதுமே ஆண்களின் ஃபேவரைட்டாம்.

* குழந்தைகள் என்றாலே பெரும்பாலான பெண்களுக்கும் பிடிக்கும்… அதனால்தானோ என்னவோ பேபி பிங்க்கும் பிடித்து போனது.

* கண்ணிற்கு அடிக்காமல் லைட்டாக இருப்பதால் பிங்க் கலர் ஆடைகள் அனைத்து ஸ்கின் டோனிற்கும் செட் ஆகும்.

* பொதுவாகவே லேசான நிறங்களுக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை அதிகம். பிங்க்கும் இந்த வகையில் மன அமைதியைத் தருவதாகவே சில பெண்களின் கருத்துங்க சொல்றாங்க.

சரி, அறிவியல் என்ன சொல்கிறது…?

பொதுவாகவே வலது பக்க மூளை லேசான நிறங்களையும், இடது பக்க மூளை அடர்த்தியான நிறங்களையும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும். மூளையின் முன் மடல் பகுதிதான் பொதுவாக நிறங்களை வேறுபடுத்தி அறியக் கூடியது. பெண்களுக்கு இந்த முன்மடல் பகுதி வலது பக்கமாக இருப்பதால்தான் பிங்க் போன்ற லேசான நிறம் மீது கேர்ள்ஸ்க்கு அப்படி ஒரு கிரஷ்!

ஆண்களுக்கு இந்தப் பகுதி மூளையின் இடது பக்கமாக இருப்பதால், அடர்த்தியான நீல நிறத்தின் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஆசை இருக்குமாம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, ‘பிங்க் பிடிக்கலைன்னா பொண்ணே இல்லைங்கற ரேஞ்சுக்கு லுக் விடுறாய்ங்கய்யா. அதுக்காகவும் கூட அப்படி சொல்லிக்க வேண்டியதா இருக்கு’னு புலம்பும் கேர்ள்ஸ் தனி ரகம்..! ம்ம்ம்…என்ன செய்ய

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு… நம்பமுடியாத உண்மை…!!
Next post நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு உகந்த அபான முத்திரை…!!