மெக்சிகோவில் அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு – 15 வயது சிறுவன் சாதனை…!!

Read Time:2 Minute, 25 Second

201605121001139869_15-years-Boy-discovers-long-lost-ancient-Mayan-city-using_SECVPFமெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் ஒன்றை 15 வயதான சிறுவன் வில்லியம் காதுரி கண்டுபிடித்துள்ளான்

அமெரிக்க கண்டங்களில் வெள்ளைக்காரர்கள் குடியேறுவதற்கு முன்பாக அங்கு பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். அதிலும் மாயன் இன மக்கள் மிகுந்த நாகரீகத்துடன் இருந்து வந்தனர். கட்டிட கலைகளிலும் அவர்கள் சிறப்புற்று இருந்தார்கள்.

பழங்குடியின மக்கள் பெரும்பாலானோரை அழித்துவிட்டுதான் அங்கு ஐரோப்பியர்கள் குடியேறினார்கள். மாயன் காலத்து மக்கள் நகரங்கள் பல ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர்களின் 5 பெரிய நகரங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காடு உள்ளது. அங்கு மாயன் காலத்து நகரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் 80 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பிரமீடு, 30–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இதை 15 வயது சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துள்ளான். இந்த சிறுவனது பெயர் வில்லியம் காதுரி. கனடாவில் கியூபெக் நகரை சேர்ந்தவன்.

மாயன் மக்களின் வரலாற்றை பற்றி தெரிந்து கொண்ட அவன், அவர்களது நகரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கூகுல் உலக புகைப்படம் மற்றும் கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து இந்த நகரத்தை அவன் கண்டுபிடித்துள்ளான்.

மாயன் காலத்து மக்கள் கி.மு. 1800 ஆண்டிலிருந்து கி.பி. 900–ம் ஆண்டு வரை சிறப்பாக வாழ்ந்ததாக சரித்திரங்கள் கூறுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு காரணம்..!!
Next post போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…!!