புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்! சிறுமியின் உருக்கமான கடிதம்…!!

Read Time:3 Minute, 5 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தாம் மீண்டு வருவேன் என கூறி எழுதியுள்ள உருக்கமான கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.

பிரித்தானியாவின் ஹல் நகரில் குடியிருந்து வரும் 12 வயதான மார்லி எனும் சிறுமி அரிய வகை புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிகிச்சை காரணமாக அமெரிக்க செல்லவுள்ள சிறுமி மார்லி, கைப்பட எழுதியுள்ள கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.

நோய்வாய்ப்பட்டிருக்கும் தாம் அதிக வலியை உணர்வதாகவும், பல்வேறு சோதனைகளின் முடிவில் தமக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாக கூறும் சிறுமி மார்லி, தமக்கு வந்திருப்பது எலும்பு புற்றுநோய் எனவும் இதனை Ewing’sSarcoma என அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வருவேன் என கூறும் அவர் அதற்கென அமெரிக்கா செல்ல இருப்பதையும் அந்த கடிதத்தில் மார்லி தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி சிகிச்சைக்கென 9 வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க உள்ளதையும் சிகிச்சையை விடவும் அமெரிக்காவின் டிஸ்னிலாண்ட் செல்லவிருப்பதே தமக்கு உற்சாகத்தை தருவதாகவும் சிறுமி மார்லி குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி மார்லியின் நோய் குறித்து பலமுறை சோதனை செய்தும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் வெறும் வலி நிவாரணி மட்டுமே வழங்கி வந்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாளுக்கு நாள் சிறுமி உடல் வலியால் மிகவும்அவதிப்பட்டு வந்துள்ளார். பாடசாலை செல்ல முடியாமலும், இரவு சரிவர தூக்கம் இல்லாமலும் துன்பத்தை அனுபவித்து வந்துள்ளார்.

மார்லியின் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.42 லட்சம் வரை நிதி திரட்ட முடிவு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து திட்டமிட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களிடம் இருந்தும் இயன்ற நிதி உதவிகளையும் கோரியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம்: ஸ்தம்பித்த போக்குவரத்து…!!
Next post 11ம் வகுப்பு மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள்: ’ராகிங்’ கொடுமை…!!