யாழ் இந்து மாணவர்களைப் பலியிடும், அடுத்த தமிழீழ தேசியத் தலைவருக்கு(?) பணிவான வேண்டுகோள்..!!
விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது யாழ் இந்துக்கல்லுாரி். யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் மதி நுட்பமான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்பித்து வந்துள்ளது இப் பாடசாலை.
குறிப்பாக கிராப்புறங்களில் ஏழ்மையில் வசதியில்லாத பெற்றோர்களுக்கு பிள்ளையாய் பிறந்து தமது திறமைகளை புலமைப்பரிசில் பரீட்சையில் வெளிக்காட்டி தம்மை அடையாளப்படுத்தி வந்த மாணவர்கள் அதிகமாக படிக்கும் கல்லுாரி இதுவாகும்.
இக் கல்லுாரி படைத்த சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். உலகெங்கும் உள்ள தமிழர்களில் இக் கல்லுாரியில் படித்தவர்களே பெரும்பாலும் தமது அடையாளத்தை வெளிப்படுத்தி ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து வருகின்றார்கள்.
தனது பிள்ளையும் யாழ் இந்துக் கல்லுாரியில் கல்வி பயில்வதை பெருமையாகச் சொல்வதில் எந்தப் பெற்றோரும் பின்னிற்பதில்லை. யாழ் இந்துக்கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவர்கள் பத்துவயதிலேயே தமது ஆற்றலை வெளிக்காட்டியே அக் கல்லுாரிக்குச் செல்கின்றார்கள்.
அவ்வாறு செல்லும் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து வந்தனர். இதற்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த நிலையும் காரணமாகும்.
யுத்த காலங்களில் யாழ் இந்துக்கல்லுாரியில் இருந்து ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு உயிரை விட்டும் அங்கவீனமாகியும் தமது கல்வியை நாசம் செய்து நடுத்தெருவிலும் நிற்கும் வரலாறு ஊரே அறியும்.
ஆனால் தற்போது ஆயுத யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் சென்றுவிட்டது. இந் நிலையிலும் யாழ் இந்துக்கல்லுாரியில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க சொற்ப நிலையிலேயே இருக்கின்றது. இதற்குக் காரணம் யார்?
பத்து வயதுவரை படித்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவன் உயர்தரத்தில் சித்தியடையவில்லை என்றால் முற்று முழுதாக அவனின் பாடசாலைச் சூழ்நிலையே காரணம் என கொள்ளலாம். ஏனெனில் 10 வயதில் மாணவன் சித்தியடையும் போது பெற்றோர் எடுத்த அக்கறையே உயர்தரத்திலும் எடுத்திருப்பார்கள் என எண்ணலாம்.
யாழ் இந்துக் கல்லுாரியில் நடப்பது என்ன?
அண்மையில் யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் யாழ் இந்துக்கல்லுாரியில் படித்த மாணவர்களா ரவுடிகளாக இருக்கின்றார்கள்? என ஏங்கும் அளவுக்கு யாழ் இந்துக் கல்லுாரி மாணவர்களின் நிலை சென்றுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட வாள் வெட்டு, அச்சுறுத்தல் போன்றவற்றில் யாழ் இந்துக் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என அதிர்ச்சித் தகவல்களை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓரிரு நாட்களுக்குள் 5 யாழ் இந்துக் கல்லுாரி மாணவர்கள் (4 பேர் பழைய மாணவர்கள்) வாள் வெட்டுச் சம்பவங்களில் பிடிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது பொலிசாரால் பிடிக்கப்பட்ட யாழ் இந்து மாணவனான இரத்தினசிங்கம் செந்துாரன் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாவான். இவன் உயரம் பாய்தலில் மிகச் சிறந்த வீரனாவான்.
இந்த மாணவர்கள் யார்? ஏன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்? இவர்களுக்கு துாண்டு கோலாக யாராவது இருக்கின்றார்களா? என குறித்த மாணவர்களின் நண்பர்களிடையேயும் பாடசாலை வட்டாரங்களிலும் ஆராய்ந்து பார்த்ததில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம் மாணவர்கள் உட்பட சுமார் நுாற்றைம்பது மாணவர்களுக்கு மேல் (பழைய மாணவர்கள் உட்பட) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு தேர்தலில் மிக முக்கிய பாத்திரங்கள் வகித்து உதவி புரிந்தவர்களாவர். உசாந்தன் எனப்படும் பழைய மாணவனின் தலைமையில் பலரும் இன்னும் சிலரின் தலைமையில் பல மாணவர்களும் சிவஞானம் சிறிதரனுக்கு தேர்தலில் உதவி புரிந்த மாணவர்கள்.
உண்மையில் யாழ் இந்துக் கல்லுாரி மாணவர்களுக்கு இருக்கும் தமிழ்த்தேசியப்பற்றே சிறிதரனுக்கு உதவ மாணவர்களைத் துாண்டியது. இக் கல்லுாரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து தாய் தந்தையர்களால் தமிழ்த்தேசியப் பற்றுடன் கலாச்சாரப் புறழ்வுகள் இல்லாது நேர்மையாக வளர்க்கப்பட்டவர்கள் ஆவர். அத்தடன் இவர்களின் அண்ணா, அக்கா, மாமா, சித்தப்பா அல்லது அயல்வீட்டு உறவுகள் யாராவது தமிழ்த்தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு மாவீரர்களாகவோ அல்லது காணாமல் போனவராகவோ இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் ஒரு பாடசாலையில் ஒருங்கிணைந்து கற்கும் போது அங்குள்ள சிலர் குறித்த மாணவர்களுக்கு தவறான வழிகாட்டல்களைக் காட்டி அவர்களை திசை திருப்பி தங்களது சுயநலத்திற்காக மாணவர்களைப் பலிக்கடாவாக்குகின்றனர். சிறிதரனின் புதல்வர்களும் யாழ் இந்துக்கல்லுாரியில் கற்கும் போது தமது மாமாவான (அம்மாவின் தம்பி) புலிகளின் படைத்தளபதி தீபனின் பெயரை கூறி தமது அப்பாவுக்கான செல்வாக்கை மாணவர்களிடத்தில் பரப்பி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே சில மாணவர்கள் சிறிதரனின் மகன் மற்றும் யாழ் இந்துக்கல்லுாரி பழைய மாணவனாக இருந்து சிறிதரனின் வாலாக மாறி உள்ள ஒருவன் போன்றவர்களால் ஹீரோயிசமாக தோன்ற முற்பட்டு தற்போது தலைகீழான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இம் மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே விட்ட (பழைய மாணவர்கள் உட்பட) சிறு சிறு தவறுகளை பொலிசாரும் தட்டிக் கேட்பதை சிறிதரன் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.
தேர்தல் நேரத்தில் சுவிஸ்லாந்தில் உள்ள ஒருவரைத் தொடர்புபடுத்தி இவர்களுக்கான பணவசதியையும் சிறிதரன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதும் அறியவருகின்றது.
யாழ் இந்துக்கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்களே வாள் வெட்டிலும் ரவுடித்தனத்திலும் ஈடுபடுகின்றார்கள் என செய்திகள் வந்திருந்தாலும் குறித்த சம்பவங்களில் இம் மாணவர்கள் தவறுகளைத் தட்டிக் கேட்டும் ஹீரோத்தனமான செயற்பாட்டில் ஈடுபட்டதாகவே மாணவர்களின் மத்தியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா? பொய்யா? என தெரியாது விட்டாலும் மாணவர்களை வாள் ஏந்தும் நிலைக்கு ஆளாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
தற்போது இவர்களைப் பிடித்துள்ள பொலிசார் இவர்களுக்கு ‘ரொக் டீம்‘ என பெயரும் சூட்டி அது காணாது என சில கைக்குண்டுகளையும் சொருகி அவர்களை பயங்கரவாதிகளாகவும் ஆக்கியுள்ளார்கள்.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் 72258 பேர் சிறிதரனுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளார்கள். இவ்வளவு பேரும் சிறிதரனே மாணவர்களைக் குழப்புவதற்கான முக்கிய காரணகர்த்தா என்பதை நம்புவதற்குச் சந்தேகப்படுவர்கள்.
சிறிதரன் இதனை முற்றாக மறுத்து தனது சொந்த ஊடகமான தமிழ்வின், JVP News, லங்காசிறியில் செய்தியிடலாம். சில வேளை இராணுவப் புலனாய்வின் சதி அல்லது மகிந்த அரசின் சதி அல்லது பாக்கிஸ்தான் புலனாய்வுத் துறையின் சதி என ஏதாவது ஒன்றை சொல்லி தன்னை நம்பி வாக்குப் போட்ட 72258 மக்களின் மனத்தில் மீண்டும் உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால் பொய் நீண்ட காலம் நிலைத்திருக்காது. உண்மை என்றாவது ஒருநாள் முன்னுக்கு வரும்.
அடுத்த தேசியத்தலைவராக மாற முற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிறிதரனுக்கு பணிவான சில வேண்டுகோள்கள்
நீங்கள் உங்கள் பிள்ளைகளை கார்கில்ஸ் தியேட்டரில் படம் பார்க்க வைத்தும் விளையாட்டு வீரர்களாகவும், கழகங்களின் உறுப்பினர்களாகவும் ஆக்கிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் உங்களாலும் உங்கள் பிள்ளைகள், வாலுகளாலும் உசுப்பேற்றப்பட்டவர்கள் தற்போது பொலிசாரின் கால்களுக்குள் கிடக்கின்றார்கள். இவ்வாறு நீங்கள் செயற்பட்டால் தேசியத்தலைவராக ஒரு போதும் மாற முடியாது.
உங்கள் பிள்ளைகள் பாடசாலைகளில் எவ்வாறு தொலைபேசிகளைப் பாவிக்கின்றார்கள் என்பதை எப்போதாவது நோட்டம் விட்டீகளா? உங்கள் பிள்ளைகள் தன்னிலும் பார்க்க வயது கூடிய யுவதிகளுடன் கைத்தொலைபேசிகளில் கதைக்கின்றார்கள் என எப்போதாவது பார்த்துள்ளீர்களா?
பிரிகேடியர் தீபனுடன் உங்கள் பிள்ளைகள் எடுத்த புகைப்படத்தைப் பார்த்து ஏனைய மாணவர்களும் உங்களை அடுத்த தேசியத்தலைவராக நினைக்க வேண்டும் என்று நீங்கள் சிந்தித்தால் அதற்காக பல தியாகங்களை நீங்கள் செய்ய வேண்டும்.
அதற்காக உங்கள் பிள்ளைகளுக்கு வாளைக் கொடுத்து அல்லது துவக்கைக் கொடுத்து அவர்களை வீரர்களாக்குங்கள். அதன் பின்னர் உங்களுக்குப் பின் பலர் திரள்வார்கள்.
அதை விடுத்துவிட்டு மற்றவர்களை உசுப்பேத்திவிட்டு பின்னர் அவர்களேயே இராணுப் புலனாய்வாளர்களுக்கும் பொலிசாருக்கும் காட்டிக் கொடுக்கும் வேலையை தயவு செய்து செய்யாதீர்கள்
ஏனெனில் இதை எழுதுவது உங்களுக்கு வாக்குப் போட்ட 72258 மக்களில் ஒருவனல்ல. உங்களைப் பற்றிய உண்மை தெரிந்தவன்.
Average Rating