செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்…!!

Read Time:2 Minute, 4 Second

201605091148068936_Mobile-phones-donot-cause-brain-cancer_SECVPFசெல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

“மொபைல் போன்கள்” எனப்படும் செல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வருகிறது. செல்போன் பேசும் போது உருவாகும் மின் காந்த அதிர் வலைகள் காதுவழியாக சென்று மூளையை தாக்கி புற்று நோயை ஏற்படுத்தும் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது.

இது உண்மையா என அறிய ஆஸ்திரேலியாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆராய்ச்சியை மேற் கொண்டனர்.

அதில் செல்போன் அதிகம் பேசுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் 1987,–ம் ஆண்டில் தான் செல்போன் உபயோகம் புழக்கத்தில் வந்தது.

எனவே 1982–ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களிடம் இருந்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. அவற்றில் அதிக நேரம் செல்போன் பேசுவதால் மூளை புற்றுநோய் பாதிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

அதே நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே மூளை புற்று நோய் இருந்தது. ஆகவே செல்போனுக்கும், மூளைப் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை என தெரிய வந்துள்ளது. ஆகவே வதந்திகளை நம்ப வேண்டாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாகூரின் 155-வது பிறந்தநாள் கொண்டாட்டம் எகிப்து நாட்டில் தொடங்கியது..!!
Next post புதுக்கோட்டை-திருச்சியில் சூறாவளியுடன் மழை: இடி விழுந்ததில் வீடு சேதம்…!!