தினமும் காலையில் ஓட்ஸ் மீல்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!
நாம் காலையில் சாப்பிடும் உணவே மிக மிக முக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் வெறும் வயிற்றில் இருந்துவிட்டு காலையில் சாப்பிடும் முதல் உணவுதான் நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு தேவையான எனர்ஜியைத் தரும்.
காலை உணவை தவிர்த்தால், அசிடிட்டி, அல்சர், வாய்வு என நிறைய பிரச்சனைகளை உண்டாக்கி விடும். ஆகவே காலை உணவினை மட்டும் தவிர்க்காதீர்கள்.
அவ்வாறான மிக முக்கியமான காலை உணவில் எல்லா சத்துக்களும் முக்கியமாக புரொட்டின் இருக்கும்படி சாப்பிட வேண்டும். ஆனால் நாமோ அவசர அவசரமாக கிடைத்ததை , அரைகுறையாய் சாப்பிட்டு செல்கிறோம்.
இதனால் நம் உடல் நிலைதான் பாதிக்கும். இந்த அவசர உலகத்தில் போதிய சத்துக்களை நம் உடலுக்கு அளிப்பது எப்படி என்று வழிகளைத் தேட வேண்டும்.
ஓட்ஸ் உணவு வகைகள் எளிதில் செய்யக் கூடியது. எல்லா சத்துக்களையும் கொண்டுள்ளது. உண்ணவும் அதிக நேரம் பிடிக்காது. அப்படிப்பட்ட ஓட்ஸ் பற்றி இனி காண்போம்.
தினமும் ஓட்ஸ் உண்டால் உண்டாகும் நன்மைகள் :
ஓட்ஸ் சருமம்,குடல் மற்றும் நரம்புகளுக்கு வலு சேர்க்கக் கூடியது ஓட்ஸ் தானிய வகையை சேர்ந்தது. அதன் உமி நீக்கப்பட்ட விதை , உடைத்த ஓட்ஸ் பருப்பு வகைகள், ஆகிய எல்லாமே சிறந்த சத்துக்களை கொண்டுள்ளது.
இது 13%புரோட்டின் கொண்டுள்ளது. ஓட்ஸ் தானியத்தில் மேங்கனீஸ், விட்டமின் ஈ, செலினியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. மேலும் இதில் விட்டமின் பி1, பாஸ்பரஸ், மெக்னீஸியம், போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது. விட்டமின் ஈ மற்றும் செலினியம் இணைந்து கேன்சரை விரட்டும் அற்புத சத்துக்களாகும். அவை ஃப்ரீ ரேடிகல்ஸை அழிக்கிறது .
தினமும் ஓட்ஸ் தின்றால் உடலில் நடக்கும் மேஜிக் :
ஓட்ஸ் தானியங்களை தினமும் உடலில் சேர்த்தால் உடல் பருமன் ஆகாது. குண்டாக இருப்பவர்கள் சாப்பிட்டால் உடல் குறைவது நிச்சயம். அவை குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். குறைந்த அளவு கலோரி கொண்டுள்ளது. போதுமான சத்துக்களும் நம் உடலில் சென்றடையும். முக்கியமாக நார்சத்துக்களை கொண்டுள்ளது. அது இதயத்திற்கு வலுவூட்டும்.
இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. ரத்தத்தில் LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுபடுத்துகிறது. எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தி, டைப் 2 டயாபடிஸை வராமல் தடுக்கிறது. அதிகமான நார்சத்துக்களை கொண்டுள்ளதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.. ஓட்ஸ் தானியத்தில் என்னென்ன வகை உள்ளது.
உமி நீக்கப்பட்ட ஓட்ஸ் :
உமி நீக்கப்பட்ட ஓட்ஸ் வகையை பெரும்பாலும் காலை உணவிற்கு பயன்படுத்தலாம்.அதிக அளவு விட்டமின் மற்றும் புரோட்டின் கொண்டுள்ளது. உடைக்கப்பட்ட ஓட்ஸ் பருப்பு வகை அவைகள் ஓட்ஸ் தானியத்திலிருந்து பகுக்கப்பட்டு, வறுத்து சிறியதாய் உடைத்த பருப்புக்களாகும்.
தட்டையாக்கப்பட்ட ஓட்ஸ் :
ஓட்ஸ் பருப்பினை தட்டை செய்து உருட்டிய வடிவில் இருக்கும். இது நிறைய கடைகளில் பேக்குகளாக விற்கப்படுகிறது.
வேகமாய் சமைக்கப்படும் ஓட்ஸ்:
இதுவும் தட்டையாக்கப்பட ஓட்ஸ் போலவே செய்வார்கள். அதி வேகமாக வெந்துவிடும்.
ஓட்ஸ் தவிடு :
ஓட்ஸ் தானியத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தவிடாகும். இந்த ஓட்ஸ் தானியங்களை சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. ஆனால் ஊட்டச்சத்து மிக்க ஒரு உணவாகும். இதை தினமும் காலை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.பாலிலோ யோகார்டிலோ கலந்து ஷேக் போல செய்து சாபிடலாம்.ஓட்ஸ் கலந்த குக்கீஸ், பிஸ்கட் ஆகியவை எடுத்துக் கொள்ளலாம்.
Average Rating