சத்தியமங்கலம் அருகே 3 நாட்களாக கிணற்றில் விழுந்து தவிக்கும் கரடி…!!

Read Time:1 Minute, 31 Second

201605081710416035_bear-fell-in-well-then-3-days-struggle-at-the-well_SECVPFசத்தியமங்கலம் அருகே 3 நாட்களாக கிணற்றில் விழுந்து தவிக்கும் கரடி

சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் கிடக்கிறது. நேற்று முன்தினம் சத்தி அருகே உள்ள புதுகுய்யனூர் அருகே வனத்திலிருந்த கரடி தண்ணீர் தேடி நெடுஞ்சாலைக்கு வந்தது.

ரோட்டை கடந்து சென்றபோது ஊரையொட்டி தண்ணீர் இல்லாத ஒரு கிணற்றில் கரடி விழுந்து விட்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனச்சரகர் பெர்னாட் மற்றும் ஊழியர்களும் அங்கு விரைந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் ஒரு ஏணியை வைத்தனர். அதன் மூலம் கரடி ஏறி சென்றுவிடும் என எதிர் பார்த்தனர். ஆனால் கரடி வெளியே வரவில்லை.

இதனால் கடந்த 3 நாட்களாக கிணற்றுக்குள் கரடி தவித்து வருகிறது. உணவு இல்லாமல் சோர்வடைந்த கரடிக்கு வன ஊழியர்கள் பிஸ்கட், கோதுமை, பன், கிழங்கு வகைகளை அந்த கிணற்றுக்குப்போட்டனர்.

மற்ற விலங்கு போல் கரடியை மீட்டது அபாயம் என்பதால் கரடியை மயக்க ஊசி போட்டு மீட்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் 11 வயது இந்து சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை..!!
Next post வாணியம்பாடி அருகே தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை…!!