ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தாய்: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற அதிசயம்…!!
அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்று மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் என்றநகரில் கிம் டக்கி(26) என்றபெண்மணி அவருடைய கணவரான வவுகன் என்பவருடன் வசித்து வருகிறார்.
இருவருக்கும் ஏற்கனவே பள்ளிக்கு செல்லும் வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். எனினும், ஒரு ஆண் குழந்தை வேண்டும் என இருவரும் விரும்பியுள்ளனர்.
பெற்றோரின் ஆசைப்படி, கடந்த வருடம் கிம்டக்கி கர்ப்பம் தரித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் திகதி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,வழக்கத்திற்கு மாறாக கிம்மின் வயிறுமிகவும் பெரிதாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அப்போது,மருத்துவமனையில் சோதனை செய்தபோது, அவரது வயிற்றில் 5 சிசுக்குள் வளர்ந்து வருவதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
தன்னுடைய வயிற்றில் 5 பிள்ளைகள் வளர்ந்து வருவதை அறிந்து கிம் சிறிது கலக்கம் அடைந்திருந்தாலும், கணவரின் தைரியமான கவனிப்பால் அவர் பிரசவத்திற்கு தயாரானார்.
எனினும்,ஒவ்வொரு நாள் இரவிலும் அவரால் சரியாக தூங்க முடியவில்லை. ஒரு இரவில் 12 முறை கழிவறைக்கு செல்லவேண்டிய சிரமம் ஏற்பட்டது.
அதேபோல், 5 குழந்தைகளையும் சுகப்பிரசவமாக பெற்றெடுக்க வேண்டும் என்பதால், பிரசவதற்கு தேவையான அனைத்து உடல்பயிற்சிகளையும் அவர் தவறாமல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த ஜனவரி மாதம் பிரசவத்திற்காக கிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறக்கப்போகிறது என்பதால், அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றும் பொருட்டு அவசர சாதனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
பின்னர்,கிம்மிற்கு இயற்கையாக பிரசவ வலி தொடங்கியதும், 2 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து 5 குழந்தைகளையும் அவர் பெற்றெடுத்துள்ளார்.
பெற்றோர் எதிர்ப்பார்த்தது போல், ஒரு ஆண்குழந்தை மற்றும் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
ஒவ்வொரு குழந்தையும் 1 கிலோவிற்கும் கூடுதலான எடையுடன் இருந்துள்ளது. குழந்தைகள் அனைத்தையும் உடனடியாக அவரச சிகிச்சையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும், 6 வாரங்களாக கவனிக்கப்பட்டு வந்துள்ளது.
பின்னர், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைந்ததும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில்இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating