சாதனை படைக்கவிருக்கும் 6 சுவிஸ் இளைஞர்கள்…!!

Read Time:2 Minute, 15 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70சுவிஸ் இளைஞர்கள் 6 பேர் ஒன்றிணைந்து புது உலக சாதனை ஒன்றை நிகழ்த்த முடிவு செய்து களத்தில் குவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கால அளவுக்குள் சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களிலும் கால்பதித்து திரும்ப வேண்டும் என்பதே இளைஞர்கள் 6 பேரும் எடுத்துக்கொண்ட சவால்.

மொத்தம் 19 மணி நேரத்தில் இந்த சவாலை பூர்த்தி செய்தால் மட்டுமே அதை சாதனையாக கருதப்படும்.

அதனை கருத்தில் கொண்டு தங்களின் பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர் இந்த இளைஞர்கள். வெள்ளிக்கிழமை அதிகாலையில் Saint-Maurice பகுதியில் இருந்து ரயிலில் துவங்கும் இவர்களது பயணம் 18 மணி 27 நிமிடங்களில் Airolo, Ticino பகுதியில் முடிவுக்குவர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

19 மணி நேரத்தில் 26 மாகாணங்களில் சென்று வருவது கடுமையான திட்டமிடலால் மட்டுமே சாத்தியம் என்று கூறும் இந்த இளைஞர்கள், தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் சவாலை எதிர்கொள்வதில் அதிக சிக்கல் இருப்பதாக கருதவில்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சவாலை ரயில் பயணம் வழியாக நிகழ்த்த இருப்பதால் கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உருவாகலாம் என கூறும் அவர்கள், ஆனால் அதுபோன்ற நேரம் அதையும் சவாலாக எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறுகின்றனர்.

பட்டப்படிப்பை முடிக்கவிருக்கும் நிலையில் மேற்கொண்டிருக்கும்இந்த சவால், வாழ்க்கையின் புது அத்தியாயத்தை நிச்சயம் எழுதும் என இளைஞர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபத்தான நிலையிலுள்ள மரங்களுக்கு விசேட சத்திர சிகிச்சைகள்..!!
Next post நான் பிரித்தானியன்…நீ ஆப்பிரிக்கன்: இனவெறி வார்த்தைகளால் நடந்த சண்டை…!!