உத்தர பிரதேசத்தில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு – 46 பேருக்கு சிகிச்சை…!!

Read Time:2 Minute, 6 Second

201605051651063796_2-children-die-46-hospitalised-after-consuming-mid-day-meal_SECVPFஉத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் மதுரா கன்சி ராம் காலனியில் உள்ள குழந்தைகளுக்கான ஜூனியர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மதியம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் பால் வழங்கப்பட்டுள்ளது. வீடு திரும்பியதும் இந்த குழந்தைகளில் பலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஏசான் (5), கீர்த்தி (4) ஆகிய இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 46 பேர் மருத்துமவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதவிர குழந்தைகள் கொண்டு வந்த பாலைக் குடித்து பாதிக்கப்பட்ட 35 வயது பெண்ணின் உடல்நிலையும் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கன்சி ராம் காலனியில் டாக்டர்கள் முகாமிட்டு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்கு தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குடிக்க தடை விதித்துள்ளனர். மேலும், பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாலின் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் காதலியை அழைத்து சென்று நண்பருடன் கற்பழித்த வாலிபர் 3 பேர் கைது…!!
Next post சிகிச்சைக்கு பணம் இல்லாததால் 3 மாத குழந்தையை கொன்ற பாட்டி…!!