12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்- உலகில் நடக்கும் கொடூரம்…!!

Read Time:2 Minute, 33 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 2212 பேர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக ருமேனியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து Lorena என்ற சிறுமி கூறுகையில், கடவுள் எனக்கு அழகான குழந்தையை கொடுத்துள்ளார், இதில் என்னவொரு சிரமம் என்றால் நானும் குழந்தை தான் என தெரிவித்துள்ளார்.

தனது காதலனுடன் வசித்து வரும் Lorena, திட்டமிடாமல் வாழ்ந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கிறார்.

மற்றொரு சிறுமியான Diana கூறுகையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் கதறி அழுததாகவும், தன்னுடைய வாழ்க்கையே நாடகத்தன்மை நிறைந்ததாக மாறிப்போயுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இதற்கு காரணம் ரோமா என்ற சிறுபான்மை இன மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என நம்பப்படுகிறது.

ரோமானியாவில் Save TheChildren என்ற அமைப்பை நடத்தி வரும் Gabriela Alexandrescu என்பவர் கூறுகையில், புலம்பெயர்வு மற்றும் ஏழ்மையே இளவயது கர்ப்பத்திற்கு முதன்மை காரணம்.

அதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு போதிய உடல்நலம் சார்ந்த கல்வியறிவு இல்லாததும், அவர்கள் தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இளவயதிலேயே குழந்தையை பெற்றெடுப்பதால் மனநலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுதாங்க பாசம்- இறந்து போன எஜமானருக்காக காத்திருக்கும் நாய்…!!
Next post மனித தலைமுடியை விட நுண்ணிய வெப்பமானி! விஞ்ஞானிகள் சாதனை…!!