தென் அமெரிக்க சேர்க்கஸ் நிறுவன ங்களிலிருந்து மீட்கப்பட்டு ஆபிரிக்காவுக்கு விமானங்களில் பறந்த 33 சிங்கங்கள்…!!

Read Time:1 Minute, 41 Second

fgfffதென் அமெ­ரிக்­காவின் சேர்க்கஸ் நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்ட 33 சிங்­கங்கள் விமா­னங்கள் மூலம் ஆபி­ரிக்­கா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்டு மீண்டும் காட்டில் விடப்­பட்­டுள்­ளன.

பெரு, கொலம்­பியா ஆகிய நாடு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கை­க­ளின்­போது இச்­சிங்­கங்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. சேர்க்கஸ் சாக­சங்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட இந்த மிரு­கங்கள் மிக மோச­மான நிலையில் காணப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவற்றில் குறைந்­த­பட்சம் ஒரு சிங்கம் கண் ஒன்றை இழந்­தி­ருந்­தது.

உலகில் அதிக எண்­ணிக்­கை­யான சிங்­கங்கள் ஏக காலத்தில் விமா­னங்கள் மூலம் கொண்டு செல்­லப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த “எனிமல் டிஃபென்டர்ஸ் இன்­டர்­நெ­ஷனல்” எனும் வன விலங்கு பாது­காப்பு அமைப்­பினால் இந்­ந­ட­வ­டிக்கை ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இதற்­கான செலவை தானே பொறுப்­பேற்­ப­தாக அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
இச் சிங்கங்கள் ஆபிரிக்காவிலுள்ள வனவிலங்கு பூங்காக்களில் விடப்படவுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிராமவாசிகளால் கொண்டாடப்பட்ட ‘வானத்திலிருந்து வந்த தேவதை’ ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்தனர்…!!
Next post நியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…!!