7 பொலிஸ் அதிகாரிகளை எதிர்த்து நின்ற தனி ஒருவன்: நடுரோட்டில் நிகழ்ந்த அடிதடி..!!

Read Time:2 Minute, 49 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)உக்ரைன் நாட்டில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவரை 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய முடியாமல் திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த Vyacheslav Oliynyk என்ற நபர் ஒரு முன்னாள் பளுதூக்கும் விளையாட்டு வீரர் ஆவார்.

கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்கும் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தையும் பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

காரின் ஓட்டத்தை பார்த்து சந்தேகம் அடைந்த பொலிசார் காரை மடக்கி விசாரணை செய்துள்ளனர். ஆனால், அவர் பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

நபரை கைது செய்ய பொலிசார் முயன்றபோது, அவர்களின் பிடிக்குள் சிக்காமல் போக்கு காட்டியுள்ளார். அதேசமயம், சில பொலிஸ் அதிகாரிகளை அவர் தாக்கவும் முயன்றுள்ளார்.

ஆனால், நபரின் தாக்குதலில் இருந்து தப்பிய பொலிசார் 7 பேரை திரட்டிக்கொண்டு நபரை சுற்றி வளைத்து தாக்கி கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் விளையாட்டு வீரர் பேசியபோது, ‘பொலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவர்களை தாக்க முயன்றது தவறு தான். எனக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் எதிர்ப்பார்த்திருந்தேன்.

ஆனால், பொலிசார் என்னை அழைத்துச் சென்ற அன்றே விடுதலை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

இதன் மூலம், நான் பெரிதாக எந்த தவறையும் செய்யவில்லை என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் விளையாட்டு வீரர் மற்றும் பொலிசார் நடுரோட்டில் தகராறில் ஈடுப்பட்ட சம்பவம் உக்ரைன் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐரோப்பிய விமானத்தை சுட்டு வீழ்த்த சதி: சினிமா பாணியில் கண்டுபிடித்த ஊடகவியலாளர்…!!
Next post நிலநடுக்கத்தில் சிக்கியவர் 14 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்…!!