காதலிக்காக 1,100 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட நபர்: இறுதியில் நிகழ்ந்த திடீர் திருப்பம்…!!

Read Time:3 Minute, 29 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70கனடா நாட்டில் காதலியின் உயிரை காப்பாற்ற நபர் ஒருவர் 1,100 கி.மீ தூரத்தை நடைப்பயணமாக கடந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த Tim Michalchuk என்ற நபர் தான் இந்த வியப்பான செயலில் ஈடுப்பட்டு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

டிம்மின் காதலியான ஷானோன் டிக்ஸன் என்பவருக்கு 6 வருடங்களுக்கு முன்பாக ‘ஸ்டெம் ஸ்டெல்’ என்ற நோய் தாக்கியதால், அவரால் தனியாக எங்கும் பயணமாக முடியாது.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஷானோனின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அவருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காதலியின் சிகிச்சையை தொடங்க தன்னிடம் போதுமான பணம் இல்லாததால் அதனை பொதுமக்களிடம் திரட்ட கடந்த மாதம் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரின்ஸ் ஜோர்ஜ் என்ற நகரில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய அவர் ஒரு மாதமாக நடந்து கடந்த சனிக்கிழமை அன்று வான்கூவரில் காதலி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையை அடைந்துள்ளார்.

காதலியின் சிகிச்சைக்காக 32,000 டொலர் நிதிதிரட்ட முயற்சி செய்து தற்போது வரை 11,000 நிதி கிடைத்துள்ளது.

சனிக்கிழமை மருத்துவமனைக்கு வந்த தனது காதலனை ஷானோன் கட்டி தழுவி வரவேற்றுள்ளார். ஆனால், இதன் பிறகு டிம் செய்த காரியம் தான் அவரது காதலியை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

காதலியை கட்டித்தழுவிய டிம் அவர் முன்னால் மண்டியிட்டு ஒரு மோதிரத்தை நீட்டி ‘என்னை திருமணம் செய்துக்கொள்வாயா?’ என உருக்கத்துடன் தனது காதலை தெரிவித்துள்ளார்.

டிம்மின் செயலால் ஒரு வினாடி திகைத்துப் போன ஷானோன், டிம்மை மீண்டு கட்டியணைத்து அவரது காதலை ஏற்றுக்கொண்டு ‘நிச்சயமாக உங்களை திருமணம் செய்துக்கொள்கிறேன்’ என கண்ணீருடன் கூறியுள்ளார்.

டிம் மற்றும் ஷானோன் தம்பதிக்கு ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்து வருவதன் மூலம் அவர்களுக்கு 7 மற்றும் 4 வயதுகளில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை.மருத்துவமனை முன்னால் தனது காதலை வெளிப்படுத்திய டிம் அங்கேயே அவருக்கு ஒரு மோதிரத்தை அணிவித்து திருமணத்திற்கான அங்கீரத்தை ஏற்படுத்திக்கொண்டது அங்குள்ளவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொளுத்தும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
Next post பிரித்தானியாவில் சிறிய இளஞ்சிவப்பு மாத்திரை உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு! பொலிஸ் எச்சரிக்கை…!!