200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்..!!

Read Time:3 Minute, 36 Second

timthumb (3)புனே மாவட்டம் சிருர் தாலுகாவில் உள்ள பராட்டாகாவ் கிராமத்தை சேர்ந்தவர் மோரே. கூலித்தொழிலாளி. கடந்த 30-ம் தேதி இவர் மந்தன்வான் கிராமத்தில் உள்ள ராஜாபாலி என்பவரது வயலில் வேலை செய்வதற்காக தனது மனைவியுடன் சென்றிருந்தார். தனது நான்குவயது மகன் சுனிலையும் அவர்கள் உடன்அழைத்துச் சென்றிருந்தனர்.

மதியம் 12 மணியளவில் கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சிறுவன் சுனில் வயலில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு தோண்டப்பட்டிருந்த 200 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் தவறிவிழுந்து விட்டான்.

இதை பார்த்த அவனது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். ஓடிச்சென்று சுனிலை மீட்க முயன்றனர். ஆனால் சிறுவன் 20 அடி ஆழத்திற்கும் அடியில் சென்றுவிட்டதால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால், அவர்கள் செய்வதறியாது கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த கிராமவாசிகள் அனைவரும் அங்கு திரண்டு வந்தனர்.

தீயணைப்பு படையினர் மற்றும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். மருத்துவ குழுவினரும் வந்து சேர்ந்தனர். அவர்கள் துரிதமாக மீட்பு பணியில் இறங்கினார்கள்.

குழாய் வழியாக அவன் சுவாசிப்பதற்கு பிராணவாயு செலுத்தப்பட்டது. உள்ளே இருந்து சிறுவன் முனகும் குரல் கேட்டது. இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 27 பேர் அங்கு வந்து சேர்ந்தனர். ஆழ்துளை கிணற்றை சுற்றி உள்ள நிலப்பகுதியில் சுமார் 25 அடி ஆழத்தில் மற்றொரு குழி தோண்டப்பட்டது.

அந்த குழியின் மூலம் அமைக்கப்பட்ட பாதை வழியாக சிறுவன் உடலின் கீழ்பாதியை நெருக்கடியில் இருந்து விடுவித்தனர். எனினும், அவனது கழுத்துப்பகுதி பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால், அவனது உடலை வெளியே எடுப்பதில் சிக்கல் நீடித்தது.

எனினும், சுமார் 30 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் அந்த சிறுவன் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டான்.

இதைக் கண்ட பெற்றோரும், அந்த கிராம மக்களும் ஆனந்தக் கண்னீர் வடித்தனர். அந்த ஆனந்தக் கண்ணீர் காய்வதற்கு முன்னர், அழுகைக் கண்ணீராக்கும் வகையில் அங்கிருந்து அருகாமையில் உள்ள புனே சாசூன் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டுசெல்லும் வழியில் சிறுவன் சுனில் பரிதாபமாக உயிரிழந்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்னல் தாக்குதலில் 12 வயது சிறுமி உட்பட இருவர் பலி…!!
Next post கொளுத்தும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?