திருமணத்திற்கு மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக துரத்தி துன்புறுத்திய நபர்..!!

Read Time:3 Minute, 36 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (2)தன்னை திருமண செய்ய மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக விடாமல் பின் தொடர்ந்து துன்புறுத்திய இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜிதேந்தர் சிங் (வயது 32) அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2006ம் ஆண்டு டெல்லியில் உள்ள கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த சக மாணவி ஒருவரை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து விட்டார். இருப்பினும் படிப்பு முடியும் வரை அந்த பெண்ணை பின் தொடர்தல், வீட்டுக்கு சென்று மிரட்டுதல் உள்ளிட்ட செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் 2007ம் ஆண்டு மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்று விட்டார். ஆனாலும் ஓய்ந்துவிடாத ஜிதேந்தர் சிங்கின் தொல்லை மட்டும் ஓயவில்லை.

இந்தியாவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஜிதேந்தர், அந்த பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளார். பின்னர் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அந்த பெண்ணை இனி பின் தொடரமாட்டேன் என உறுதி அளித்தார்.

பின்னர் அமெரிக்கா சென்ற அவர் அந்த பெண் படித்து வந்த நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தன்னையும் சேர்த்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பல்கலைக்கழகம் அதனை மறுத்துவிட்டது.

இதன் பின்னர் கலிபோர்னியா மாகாணத்துக்கு சென்ற அவர் அங்கு அந்த பெண்ணின் அவரது முகவரியையும் கண்டுபிடித்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.

இதைத் தொடர்து கடந்த 2011ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு வேலை கிடைத்து பிளானோ நகருக்கு குடிபெயர்ந்தார். அந்த முகவரியையும் மோப்பம் பிடித்து விட்டார்ஜிதேந்தர் சிங்.

2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்து வந்த ஜிதேந்தர், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் யாரும் இல்லை. இதனால் வீட்டின் கதவை உடைத்து அந்த பெண்ணின் பாஸ்போர்ட், நகைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் திருடினார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜிதேந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் 8 ஆண்டுகளாக விடாமல் துரத்தி துன்புறுத்திய ஜிதேந்தர் சிங்கிற்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யானைகளைக் காக்க “அதிர்ச்சி வைத்தியம்”..!!
Next post சுவிஸ் குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விமானம்…!!