பிரித்தானியாவில் புதிதாக உதயமாகும் ‘நிர்வாண உணவகம்…!!
பிரித்தானிய நாட்டில் புதிதாக திறக்கவுள்ள ‘நிர்வாண உணவகத்தில்’சாப்பிடுவதற்கு அந்நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன.
நவீன தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சியினால், பொதுமக்களின்அன்றாட வாழ்க்கையும் வெகுவாக மாறியுள்ளது.
நவீன கண்டுபிடிப்புகளின் உதவி இல்லாமல் நாட்களை கடத்துவது என்பது தற்போதைய காலக்கட்டத்தில்இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த சூழலை உடைத்தெரிந்து எந்தவிதஅறிவியல் கண்டுபிடிப்புகளும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை பயன்படுத்தி புதிதாக ‘நிர்வாண உணவகம்’ ஒன்று லண்டன் நகரில் திறக்கப்பட உள்ளது.
சரி, ஆனால் அதென்ன நிர்வாண உணவகம்?
இந்த ஹொட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்போன்கள், கமெரா உள்ளிட்ட நவீன கண்டுப்பிடிப்பு சாதனங்களை கொண்டு வரக்கூடாது.
இங்கே வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு கூட மரத்தால் ஆனகட்டைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். உள்ளே நுழைந்தவுடன், ஹொட்டலில் விளக்குகள் கூட அணைக்கப்படும்.
மேலும், உச்சபட்சமாக இந்த ஹொட்டலுக்கு வருகைதரும் வாடிக்கையாளர்கள் ஆடைகளை நீக்கி விட்டு நிர்வாணமாக அமர்ந்து உணவருந்தலாம் என்பது தான் இந்தஹொட்டலின் ’ஹைலைட்’.
இந்த விதிமுறை என்பது கட்டாயம் அல்ல. வாடிக்கையாளர்கள் விரும்பினால் நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடலாம்.
எதிர்வரும் யூன் மாதம் திறக்கவுள்ள Bunyadi என்றஅந்த புதிய ஹொட்டலின் நிர்வாகிகள் பேசியபோது, ‘நவீன காலத்தை மறந்து இயற்கையான சூழலில் பழங்காலத்தில் மனிதர்கள் எப்படி உணவருந்தினர் என்பதை மீண்டும் கொண்டு வருவதற்காகதான் இப்படி ஒரு திட்டத்தில் ஹொட்டலை திறக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
யூன் மாதம் முதல் அடுத்த3 மாதங்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்த ஹொட்டலுக்கு தற்போது புதிய சிக்கல்ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த ஹொட்டலில் சுமார் 3,000 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை 28,984 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த உணவகத்தில் உணவருந்த விரும்புவதாக பதிவு செய்துள்ளனர்.
இத்தனை வாடிக்கையாளர்களை ஹொட்டல் நிர்வாகம் எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது என்பதை யூன் மாதத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating