அதிக வெப்பத்தால் பாடசாலைகளுக்கு பூட்டு..!!

Read Time:1 Minute, 44 Second

timthumbமீள் அறிவித்தல் விடுக்கும் வரையில் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் பூட்டப்பட வேண்டுமென மாகாண கல்விப் பணிப்பாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.எம்.என்.டபிள்யூ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக, பாடசாலை மாணவர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று பிற்பகல் இரண்டு மணி வரையில், அநுராதபுரத்தில் 36 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், பொலன்னறுவையில் 35 மற்றும் கொழும்பில் 33 பாகை செல்சியஸ் என பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர், அநுராதபுரத்தில் 38 பாகை செல்சியஸாக வெப்பநிலை காணப்பட்டுள்ளது. இந்தளவுக்கு தற்போது வவுனியாவின் வெப்பநிலை காணப்படுகிறது. இந்நிலையில், வவுனியாவிலேயே, அதிக வெப்பநிலைப் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 32 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை..!!
Next post மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்: 10 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்..!!