வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் சம்பூர் மக்கள்..!!

Read Time:2 Minute, 32 Second

timthumb (4)பல்வேறு போராட்டங்களின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் வாழ்வாதாரம் ஏதுமின்றி மிகையான கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் 360 குடும்பங்களும் அதன் பின்னர் 546 குடும்பங்களுமாக மொத்தம் 906 குடும்பங்கள் சம்பூரில் பத்து ஆண்டுகளின் பின்னர் மீளக்குடியேறின. இவர்களில் 360 குடுப்பங்களில் பெரும்பாலானோருக்கு மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் பின்னர் குடியேறிய 546 குடும்பங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. தற்காலிக கொட்டில்களோ, மலசலகூட வசதிகளோ, குடிநீர் வசதிகளோ இல்லாது மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சுமந்தவர்களாக கொழுத்தும் வெய்யிலில் வாடி வதங்குகின்றனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகளும், முதியவர்களும், ஆண்களும், பெண்களும் சொல்லொணாத் துயர்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீமுருகன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியன ஆரம்பித்து இயங்குகின்றன. சம்பூர் ஸ்ரீமுருகன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டடங்கள் அழிவடைந்த நிலையில் தற்காலிக கொட்டிலில் இயங்குகின்றது.

இங்கு கற்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்கூட இல்லாத நிலையில் மாணவர்களின் கல்வி தொடர்வது வேதனையான விடயம் என பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். இத்தகைய நிலையைப் போக்க தனவந்தர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இக்குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டவேண்டுமென்றும், உடனடியாக மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என அங்குள்ள மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டாகிய ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம்.. சூளைமேட்டில் துப்பாக்கிச் சூடு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 73) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
Next post ரதுபஸ்வல மனு மீதான விசாரணை நிறைவு…!!