இரவு படுக்கும் போது மின்விசிறி போட்டுவிட்டு படுப்பவர்களா நீங்கள்? நிமிடம் ஒதுக்கி இச் செய்தியைப் படியுங்கள்..!!
உச்சிவெயிலில் உடல் வியர்த்து வந்து மின்விசிறிக்கு அருகில் அமரும்போது ஜிலுஜிலுவென காற்று உடலை தழுவுவது தனிசுகம்தான்.
அத்தகைய குளிரூட்டும் கருவிக்கு ஆளையே கொல்லும் மறுபக்கம் இருப்பதை அறிவீர்களா?
காற்றாடி ஓடும்போது கழன்று தலையில் விழுந்து கொல்லுவது வேறு கணக்கு.
நம்மோடு கலகலவென சிரித்து பேசிக்கொண்டிருந்த நபர் பின்னர், விடைபெற்று உறங்கச் செல்கிறார். காலையில் அவருடைய அறைக்கு சென்று பார்க்கும்போது, அவர் படுத்திருந்தபடியே காயம் ஏதுமின்றி இறந்து கிடக்கிறார். அங்கு மின்விசிறி மட்டுமே வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது நீங்கள் என்ன நினைப்பீர்கள்.
இதுபோல ஒன்று, இரண்டு சம்பவமல்ல நூற்றுக்கணக்கில் நடந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்.
பரிசோதனையில் இறந்தவருக்கு மாரடைப்பும் ஏற்படவில்லை என்றால் அந்த மர்ம மரணத்திற்கு யார் காரணம் நிச்சயமாக மின்விசிறிதான்.
இந்த மின்விசிறி பயம் கொரியர்களை அதிகமாகவே குலை நடுங்க வைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
ஓடும் மின்விசிறியோடு இரவில் தனித்திருக்க பயப்படும் அளவில் அங்கு மின்விசிறி பேய்களின் பினாமியாகவே பார்க்கப்படுகிறது.
மின்விசிறி கொலை கதைகள்:
மின்விசிறி ஆளை கொல்வதுபற்றி மிகைப்படுத்தியும் கொரியாவில் கதைகள் புனையப்படுகிறது.
சினிமாக்களிலும் கதையோட்டத்தில் திடுக்கிடும் திருப்பங்களை அமைப்பதற்கு மின்விசிறி பயத்தை பயன்படுத்துவது அவர்களுடைய வழக்கங்களில் வந்திருக்கிறது.
மருத்துவர்களின் பல்வேறு கருத்து:
இறந்தவர்களை ஆய்வுசெய்த குழுவினரில் பல மருத்துவர்கள் மின்விசிறி மரணங்களை ஏற்றுள்ளனர்.
மேலும், மின்விசிறி ஓடுவதால் மட்டுமே ஒருவர் இறப்பதும் சாத்தியம் என்றும் அறிவித்துள்ளனர்.
சியோலில் உள்ள செவரன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ஜான் லிண்டோன் 2004 ல் ஜூன்காங் நாளிதழுக்காக கூறுகையில்,
“அறிவியல் பூர்வமாகவும் மின்விசிறி மரணங்கள் மீது சிறிய அளவில் ஆதரவு இருக்கிறது. ஆனால், கதவு, ஜன்னல், கூரை என எல்லாம் மூடப்பட்ட நிலையில், ஓடும் மின்விசிறியால் மட்டுமே ஒருவர் இறக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
சியோல் நேஷனல் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை பேராசிரியர் யூ தாய் வூ
“ மின்விசிறி ஓடுவதையும் இறந்து கிடப்பதையும் சேர்த்துப் பார்ப்பதால் மக்கள் மின்விசிறி மரணங்களை நம்புகின்றனர். ஆனால், ஆரோக்கியமான மனிதர்களை மின்விசிறி ஒன்றும் செய்வதில்லை அவர்கள் நன்றாக தூங்குவார்கள்’ என 2007 ம் ஆண்டு கூறினார்.
கனேடிய நிபுணர் விளக்கம்:
கனேடிய நிபுணர் கார்ட் ஜீஸ்ப்ரெசிட் மின்விசிறி மரணங்கள் பற்றி ‘ஜூன்கான்’ நாளிதழுக்கு கூறியிருப்பதாவது,
“மின்விசிறியால் இறப்பவர்கள் பெரும்பாலும் தாழ்வெப்பநிலை (ஹைபோதெர்மியா) தாங்க முடியாதவர்களாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மின்விசிறி இரவில் நீண்ட நேரம் ஓடுவதால் அதன் வெப்பநிலை 10 டிகிரி குறைந்து 28 க்கு கீழே போகும்போது அவர்களுடைய முகத்தைச்சுற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது அதனால், மூச்சுத்திணறி இறக்கலாம். என கூறுகிறார்.மேலும், அதையே காரணமாகக் கொண்டு பயனுள்ள ஒரு அறிவியல் கருவிமீது கொலைப்பழி சுமத்துவது சரியல்ல. உதாரணமாக, டிவியின் அருகில் இருந்து பார்த்தால், கண்களை பாதிக்கிறது. அதற்காக, டிவி கண்பார்வையை பறிக்கிறது என்று ஒதுக்கிவிட முடியுமா? என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்.
அறிவியல் கூறுவதென்ன?
கொரியாவின் நகர்ப்புற மக்கள் மின்விசிறி மரணங்களை உறுதியாக நம்புகின்றனர்.
35 ஆண்டுகளாக அங்கு நிகழ்ந்த பல மரண சம்பவங்களை வைத்து ஊடகங்களும் மக்கள் கருத்தை பிரதிபலிக்க துவங்கியுள்ளன.ஆனால், அறிவியல் கூற்றுப்படி, மின்விசிறி மரணங்கள் வாய்ப்பில்லை என்பதுதான்.
மேலும், மின்விசிறி ஓடும்போது, வெப்பநிலை குறைகிறது என்று சொல்லப்பட்டாலும் மின்விசிறி ஓடுவதால் அதன் மோட்டார் சூடாகிறது.
அந்த வெப்பம் அறையின் காற்றலைகளில் கடத்தப்படுவதால் சமயங்களில் கொஞ்சம் அனலாகவும் வீசும். அது இயற்கையாக வீசும் காற்றைவிட இனிமை குறைந்ததாகவே இருக்கும். வெளிக்காற்று வராமல் முற்றிலும் அடைக்கப்பட்ட அறையில் மின்விசிறி ஓடினாலும் அந்த அறையின் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்து ஆக்ஸிஜன் குறையவே செய்யும்.
மின்விசிறியின் வேகமான காற்றலை, திடீரென குறையும் வெப்பநிலை, அறை காற்றில் மிகும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தலாம்.
மூடநம்பிக்கையா? நுட்பமான அறிவியலா?
மின்விசிறி ஆளைக் கொல்லும் அளவுக்கு தீங்கானது என்பதை மேலோட்டமாக கேட்கும் போது ஒரு மூடநம்பிக்கை போல தோன்றினாலும் அதில் ஒரு நுட்பமான அறிவியல் பார்வை உள்ளது என்பதும் உண்மைதான்.
ஆரோக்கியத்தில் மனிதர்களுக்குள் ஆயிரக்கணக்கான நிலைகள் உண்டு. உச்சிவெயிலில் உழைக்க முடிந்தவனும் இருக்கிறான். உலா செல்லும் போதே மூர்ச்சையாகி விழுந்து முடிபவனும் இருக்கிறான்.
ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் பைத்தியமானவனும் இருக்கிறான். அதே அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு அதற்கு வைத்தியமானவனும் இருக்கிறான்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கூட விஷம்தானே அதுபோல, மனிதர்களிடையே உள்ள ஆரோக்கிய பேதங்களால் மின்விசிறிகள் கூட சிலருக்கு கொலை கருவியாக மாறலாம்.
கொரியா மக்களிடமே அதிக மின்விசிறி மரணங்கள் நடந்திருப்பதால் அந்த இனத்தவர்களின் உடல் சுபாவத்தில் மின்விசிறி பயன்படுத்துவதில் ஒவ்வாமை பொதுவாகவே இருக்கலாம்.
அது பல்வீனமானவர்களிடம் மிகுந்து வெளிப்படுவதால் மரணம் நேர்கிறது.
நுட்பமானவையே தீங்கை தெரியப்படுத்தும்:
நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் காற்று நம் கண்களை உறுத்துவதில்லை. அது இயற்கை. அதே சமயம், 80 கி.மீ. வேகத்தில் பைக்கிள் செல்லும்போது காற்று விழித்திரையை கிழிப்பதுபோல உறுத்தும். இந்த வேகம் செயற்கையானது.
இதை நாம் கைகால்களில் உணர்வதைவிட கண்களில்தான் வலியோடு உணர்கிறோம். காரணம் அதுவே நுட்பமான உறுப்பு. பாதுகாக்க கண்ணாடிகளும் அணிகிறோம். அதுபோல, மின்விசிறிகளின் தீங்கிற்கு கொரியர்கள் நுட்பமானவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.
Average Rating