தாய் இருமியதால் மிரண்டு பிறந்த சிசுவை கடித்துக் கொன்ற நாய்…!!

Read Time:1 Minute, 57 Second

201604241349134436_Newborn-infant-killed-by-dog-bite_SECVPFதாய் இருமியதால் மிரண்ட நாய் பிறந்த சிசுவை கடித்துக் கொன்றது.

அமெரிக்காவில் சான் டியாகோ நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று அந்த சிசுவை படுக்கையில் கிடத்தி வைத்திருந்தனர்.

சிசுவின் தாயும், தந்தையும் இருக்கையில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் வீட்டில் வளர்த்து வரும் ‘போலோ’ என்ற செல்ல நாயும் இருந்தது.

டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது சிசுவின் தாய் இருமினார். அதைக் கேட்டு மிரண்ட நாய் என்னமோ ஏதோ என கருதி படுக்கையை நோக்கி தாவி ஓடியது.

அங்கு படுக்க வைத்திருந்த சிசுவை கடித்துக் குதறியது. அதன் சத்தம் கேட்டு ஓடிய பெற்றோர் நாயிடம் இருந்து சிசுவை மீட்டு பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து வந்து சிசுவை கடித்துக் கொன்ற நாயை பிடித்துச் சென்றனர். வெறி நாய்கடி நோயை ஏற்படும் ‘ரேபிஸ்’ கிருமி தாக்கியுள்ளதா என பரிசோதிக்க அந்த நாயை 10 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் இடம்பெற்ற சில பயங்கரமான சம்பவங்களும், சுவாரஸ்யமான சம்பவங்களும்..!!
Next post நெல்லை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கணவர் போலீசில் சரண்…!!