உதயபுரம் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்..!!
பேசாலை உதயபுரத்தை சேர்ந்த 5ம் ஆண்டு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்தற்கு உட்படுத்தியமைக்கு எதிராக குறித்த கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அதிகாலை 4 மணிமுதல் வங்காலைபாடு சந்தியில் வீதிதடைகள் ஏற்படுத்தபட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்நிமலநாதன் பாதிக்கப்பட்ட கிராம மக்களின பிரச்சினைகள் தொடர்பாக கேட்டு அறிந்து கொண்டதுடன், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விடயம் தொடர்பாக அறிவித்ததுடன் மக்களையும் சமரச படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும்.
பெண்கள், சிறுவருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகங்களை தடுப்பதுடன் பாதிக்கப்பட்ட உதயபுரம் சிறுமிக்கு நீதிகிடைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது
உதயபுரம் கிராமத்தை சேர்ந்த துள்ளுகுடியிருப்பு சென்.மேரிஸ் பாடசாலையின் 5ம் ஆண்டு மாணவி ஒருவர் தனியார் வகுப்பிற்கு பேசாலை 5ம் வட்டாரத்திலுள்ள வீடோன்றில் டியூசன் வகுப்பிற்கு சென்றுவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு குறித்த டியூசன் வகுப்பிற்கு சென்றிருந்தபோது அங்கு ஆசிரியர் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில் சிறுமி அப்பகுதியில் நின்றுள்ளார். அதனை அவதானித்த குறித்த டியூசன் ஆசிரியரின் வீட்டிற்கு அருகிலுள்ள இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியின் பக்கத்திலுள்ள அவரது வீட்டிற்கு சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.
குறித்த இளைஞனின் சொந்த விடான பாழடைந்த வீட்டிற்கு சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து அங்கிருந்து தப்பித்துள்ள சிறுமி அருகிலுள்ள கடை ஒன்றிற்கு ஓடிசென்று தனக்கு நடந்தவிடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டு அதனுடாக சிறுமியின் பெற்றோர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
துஸ்பரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரை பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரி வங்காலை பாடு சந்தியில் அதிகாலை 4 மணிமுதல் வீதிதடைகள் ஏற்படுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் மற்றும் அங்கு வந்திருந்த பொலிசார் சமரசப் படுத்தி வீதித் தடையை அகற்றுமாறு தெரிவித்தனர்.
ஆனால் ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்தபகுதிக்கு சிறுவர் நன்நடத்தை பிரிவு அதிகாரி மற்றும் பகுதி கிராமசேவகருக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக தகவல் வழங்கியும் அவர்கள் வராததை ஆட்சேபித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்.
வாகன போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்திருந்தனர். ஆதனால் தலைமன்னார் பிரதான வீதியூடாக பயணித்த அனைத்து வாகனங்களும் செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே அங்குவந்த கிராசேவகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிசாரும் ஆர்ப்பாட்டகாரர்களிடம் சமரபேச்சு நடத்தபட்டு குறித்த பாலியல் துஸ்பிரயோக சந்தேக நபருக்கு கடுமையான தண்டனை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Average Rating