ஹீரோவாகும் ஹிஸ்புல்லா தலைவர்

Read Time:4 Minute, 7 Second

Hisbulla-HasanNasralla.jpgஇஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களை சமாளித்து பதில் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நசரல்லாவுக்கு லெபனான், பாலஸ்தீனம் உள்ளிட்ட அரபு நாடுகளில் செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. முன்னாள் எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசருக்குப் பிறகு மிகவும் வலிமையான அரபுத் தலைவராக அவரை அரபு நாடுகளின் மக்கள் புகழ்கின்றனர். சொன்னதை செய்து காட்டுபவர் என்று நசரல்லாவை அரபியே நாடுகளின் மக்கள் புகழ்கின்றனர்.

ஈரானில் நடந்த பேரணியில், நசரல்லா தொடர்ந்து இஸ்ரேல் படைகளைத் தாக்க வேண்டும். டெல் அவிவ் நகரை தரைமட்டமாக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கோஷமிட்டனர். பாலஸ்தீனத்திலும் நசரல்லா ஆதரவு பேரணிகள் நடந்து வருகின்றன.

15 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கடும் தாக்குதலுக்கு லெபனான் நாட்டு ராணுவம் பதிலடி தராமல் இருக்கும் நிலையில், ஹிஸ்புல்லா படையினர் கடும் பதிலடி தந்து இஸ்ரேலுக்கு ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளனர். இந் நிலையில் நசரல்லாவின் பேச்சு அடங்கிய ஆடியோ கேசட் லெபனான் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது. அதில்,

லெபனானில் இஸ்ரேல் படைகள் மேலும் கடுமையான விளைவுகளை சந்திககும். இஸ்ரேல் படைகளை விரட்டியடிப்பதே எங்களது குறிக்கோள். இதற்காக லெபனானில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் நாங்கள் போராடுவோம். எங்களது யுத்தம கொரில்லா பாணி யுத்தமாகும்.

எங்களுக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது என்பதை இதில பார்க்கக் கூடாது. மாறாகா, இஸ்ரேலுக்கு எப்படி பாதிப்புகளை ஏற்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் என்று முழங்குகியுள்ளார் நசரல்லா.

நிரம்பி வழியும் அகதிகள்:

போருக்கு முடிவு தெரியாத நிலையில், தெற்கு லெபானாலிருந்து தப்பி வரும் அகதிகள் சிடோன் நகரில் குவிந்து வருகின்றனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் பெரும்பாலான பகுதிகள் சிக்கித் தவிக்கின்றன என்றாலும் தெற்கு லெபனான்தான் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்க இடம் பெயர்ந்து வருகின்றனர்.

தப்பி வரும் அனைவரும் தெற்கு லெபனானின் பெரிய நகரான சிடோன் நகரில் குவிந்து வருகின்றனர். இங்குள்ள பள்ளிக் கூடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு லெபனானின் பல்வேறு பகுதிகளில் தவித்துக் கொண்டிருப்பவர்கள் பல்வேறு கார்கள், வாகனங்கள் மூலம் சிடோன் நகருக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

சிடோன் நகரம் பெரிய நகராக இருந்தாலும் கூட ஏழரை லட்சம் பேரைத் தாங்க முடியாமல் திணறி வருகிறது. சில நாட்களியே இந்த நகரின் மக்கள் தொகை 35 சதவீதம் உயர்ந்திருப்பதாக அந்நகரின் தலைவர் அப்துல் ரஹமான் அல் பிஸ்ரி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை விமான தாக்குதல் 6 புலிகள் பலி
Next post லெபனானில் 130 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்