பிரசெல்ஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி நஜீம் லாஷ்ராவி ஐ.எஸ் அமைப்பில் ஜெயிலராக இருந்தார்..!!

Read Time:2 Minute, 6 Second

201604221746487065_Brussels-bomber-identified-as-jailer-of-foreign-IS-hostages_SECVPFபிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நஜீம் லாஷ்ராவி, ஐ.எஸ் அமைப்பில் ஜெயிலராக இருந்தார் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் உள்ள ஸவன்டெம் என்ற விமான நிலையத்தில் கடந்த மாதம் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. விமான நிலையத்திலும் மெட்ரோ நிலையத்திலும் செவ்வாய்க் கிழமையன்று நடந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.

ஜாவுண்டம் விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நஜீம் லாஷ்ராவி குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நஜீம் லாஷ்ராவி சிரியாவில் இயங்கி வந்த ஐ.எஸ் அமைப்பில் வெளிநாட்டு பிணைக் கைதிகளுக்காக ஜெயிலராக இருந்தவர் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளார்கள் சிரியாவில் கடத்தப்பட்டார்கள். அவர்கள் நஜீமை அடையாளம் கண்டுபிடித்தனர்.

அபு இட்ரீஸ் தான் நஜீம் லாஷ்ராவி என்பதை நிகோலஸ் ஹெனின் என்ற பத்திரிக்கையாளர் அதிகாரப்பூர்வமாக கண்டறிந்ததாக, வழக்கறிஞர் மேரி- லௌரி இன்கோப் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேதாரண்யம் அருகே விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு: நாகை கோர்ட்டு உத்தரவு…!!
Next post தென்கொரியாவில் வேகமாக வந்த ரெயில் தடம் புரண்டது..!!