மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை: சாதனை படைத்த மருத்துவர்கள்…!!

Read Time:2 Minute, 40 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)போலந்து நாட்டில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அது தற்போது வீட்டுற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போலந்து நாட்டில் வசித்து வரும் 41 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் அண்மையில் அங்குள்ள Wroclaw பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இவரது மூளையில் குணப்படுத்த முடியாத கட்டி இருந்ததால், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்ப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும், கடுமையான போராட்டங்களுக்கு பிறகு, கர்ப்பிணி பெண்ணை சுயநினைவு இல்லாமலே 55 நாட்கள் மருத்துவமனையில் வைத்தனர்.

இந்த நாட்களில் வயிற்றில் இருந்த குழந்தை நன்கு வளர்ந்துள்ளது. எனினும், நீண்ட நாட்கள் குழந்தை வயிற்றில் இருப்பது அதன் உயிருக்கு ஆபத்து என தீர்மானித்த மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தையை மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து அதிநவீன சிகிச்சை மூலம் கண்காணித்து வந்துள்ளனர்.

குழந்தை பிறந்ததும் தாயாருக்கு அளித்து வந்த சிகிச்சையை நிறுத்தியதால், அவர் உயிரிழந்தார்.குழந்தை பிறந்தபோது ஒரு கிலோ மட்டுமே இருந்ததால், கடந்த 3 மாதங்களாக குழந்தை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தைக்கு 3 கிலோ எடை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, உயிரிழந்த தாயாரின் உறவினர்களை அழைத்த மருத்துவர்கள் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

தற்போது அந்த குழந்தை வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும், குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு போலீஸ் நிலையத்தில் கதறிய 10–ம் வகுப்பு மாணவி…!!
Next post காதலி மற்றும் சகோதரனை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்..!!