விஷ்ணுபிரியா மர்ம சாவு: சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளிவைப்பு…!!

Read Time:2 Minute, 23 Second

201604211304574167_Visnupiriya-Mystery-deathCBI-The-petition-asked-the-trial_SECVPFநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விஷ்ணு பிரியா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனு தள்ளிவைப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா. இவர் கடந்த ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இவரை உயர் போலீஸ் அதிகாரிகள் சித்ரவதை செய்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது சாவில் மர்மம் உள்ளது என்றும் அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று விஷ்ணுபிரியாக தந்தை ரவி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ரவி, மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி. ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்து விட்டனர். இந்த வழக்கில் ரவி தரப்பில் அதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘விஷ்ணுபிரியா மர்மச்சாவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் நியாயமாக இருக்காது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் ரவி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எண்ணெய் விலை வீழ்ச்சியால் வெளிநாடுகளில் கடன் வாங்கும் சவுதிஅரேபியா…!!
Next post ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடது கையும் பார்ப்பது ஏன்?