உலகின் மிகப்பெரிய மசூதியை உருவாக்கியவர் முகலாயரா…!!
தெற்கு ஆசிய நாடான பாகிஸ்தான், முஸ்லீம் குடியரசு நாடு. மக்கள் தொகையில் உலகில் ஆறாவது இடம் வகிக்கும் இந்த நாடு இஸ்லாமாபாத்தை தலைநகராகக் கொண்டது.
மொகலாயர் படையெடுப்பு, அதன்பிறகு ஆங்கிலேயர் படையெடுப்பு என்ற இந்திய வராலாறு போன்றதே பாகிஸ்தானின் வரலாறும்.
அதனால், வரலாற்று நினைவிடங்கள். முகலாயர் காலத்து மசூதிகள், கல்லறைகள், தோட்டங்கள் என பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல இங்கு உள்ளன.
ஏரி, தீவு, ஆறு, குன்று, மலைப்பிரதேசம் என சுற்றுலா சூத்திரமுடைய பகுதிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானிஸ்தானை எல்லை நாடுகளாக கொண்ட பாகிஸ்தானின் முக்கிய சுற்றுலா தலங்கள் வருமாறு.
பாத்ஷாகி மசூதி, லாகூரில் உள்ள தோட்டம் மற்றும் கோட்டை, மசார் இ கொய்த், பைசல் மசூதி, ப்ரேர் ஹால், மொஹட்டா அரண்மனை, கராச்சியிலுள்ள PAF அருங்காட்சியகம், வாஷிர்கான் மசூதி, கிலிப்டன் கடற்கரை, லோக் விர்ஸா அருங்காட்சியகம், மினர் இ பாகிஸ்தான், ராவல் ஏரி, எம்ப்ரஸ் சந்தை என சொல்லிக்கொண்டே போகலாம்.
பாத்ஷாகி மசூதி
லாகூரில் உள்ள இந்த மசூதியே உலகின் மிகப்பெரிய மசூதியாக கட்டட அமைப்பில் கருதப்படுகிறது. இது முகலாயர் காலத்தில் கட்டப்பட்டது.
முகலாயர்களின் ஆறாவது பேரரசரான ஒவுரங்கசீப்பால் (1671-1673) கட்டப்பட்டது.
இந்தோ- பாகிஸ்தான், இஸ்லாமிக் மற்றும் முகலாயர்கள் கட்டட கலை பாணிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் இதனுள் ஒரே சமயத்தில் இருக்கமுடியும். இதன் உயரம் 69 மீ.
அமைதிக்கும் பிரார்த்தனைக்கும் சிறந்த இடமாகவும் மிகப்பெரியதாகவும் அழகிய கலைநுட்பம் கொண்டதாகவும் இருப்பது சிறப்பு என பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர்.
இது இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டுத்தலமாகவும் அனைவருக்கும் இனிய சுற்றுலாதலமாகவும் பயன்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
சாலிமார் தோட்டம்
இது முகலாயர்கள் (1637- 1641) காலத்தில் வடிவமைக்கப்பட்ட தோட்டம். முகலாயர்கள் தோட்ட பாணி என்றாலே, தட்டையான நீர்நிலைகளும் அதைச்சுற்றிலும் அழகிய எளிமையான சிறுசிறு சுவர் மற்றும் தள அமைப்புகளும் அதனூடே செழித்த தாவரங்களில் சிரிக்கும் வண்ண மலர்களுமாக தென்படுவதே அழகுக்கு ஆதாரம்.
இந்த விதிமுறைகள் சாலிமார் தோட்டத்திலும் மீறப்படவில்லை. 1981 ல் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய பகுதிகளில் ஒன்றாக இது அறிவிக்கப்பட்டது.
லாகூர் கோட்டை
லாகூர் கோட்டை வரலாற்று சிறப்புடையது. இது உள்நாட்டில் ஷாஹி கிலா என அழைக்கப்படுகிறது. இந்த கோட்டை லாகூர் பஞ்சாப், பாகிஸ்தான் ஆகிய மூன்று நகரங்களிலும் பரவி அமைந்துள்ளது.
இந்த அரண்மனையின் வடமேற்கு எல்லையில் இக்பால் பூங்காவும் உள்ளது. இது இங்குள்ள மிகப்பெரிய நகர்ப்புற பூங்காவாகும். பூங்கா லாகூர் பகுதியில் உள்ளது.
இதுவும் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக 1981 ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்னா தீவு
இது பாகிஸ்தானை ஒட்டியுள்ள அரேபிக் கடலில் உள்ள ஒரு சிறு அழகிய தீவு. இந்த தீவின் அமைவிட முகவரி, கராச்சியில் கியாமரி நகரில் முபாரக் கோத் அருகே அங்கிருந்து மேற்கே 9 கி.மீ. தூரமாகும்.
அழகிய தீவு என்பதால் சுற்றுலா தலமாக இருக்க வேறு காரணம் வேண்டுமா
மொஹாட்டா அரண்மனை
இந்த அரண்மனை ராஜஸ்தானை சேர்ந்த இந்து மார்வாரி சிவ்ராட்டன் சந்த்ராட்டன் மொஹாட்டாவால் கட்டப்பட்டது. 1927 ல் திறக்கப்பட்ட இந்த அரண்மனை அக்கால கட்டத்தில் அந்த தொழிலதிபரின் கோடைகால வாஸஸ்தலமாக இருந்துள்ளது.
இப்போது அரசு அதை சுற்றுலாதலமாக பராமரித்து வருகிறது. ஆடம்பரமும் கலைநயமும் மிக்க சுற்றுலாதலமாக மக்களை ஈர்க்கிறது. இது இந்தோ- செராஸோனிக் எழுச்சி கட்டட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
PAF அருங்காட்சியகம்
பார்க் மற்றும் ஏர்போர்ஸ் அருங்காட்சியமே சுருக்கமாக PAF என அழைக்கப்படுகிறது. இது கராச்சியில் உள்ள ஷாஹ்ரா இ பைசாலின் கர்ஸாஸ் மேம்பாலத்திற்கு அருகில் உள்ளது.
அருங்காட்சியமும் பூங்காவும் அருகருகே இணைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு விருந்துதான்.
ராவல் ஏரி
இயற்கை எழிலான ராவல் ஏரி ரசிக்க இனியது. ராவல் ஏரியில் கட்டப்பட்டுள்ள நீர்தேக்க செயற்கை அணையால் ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் நகருக்கு தண்ணீர் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது.
இந்த ஏரி அருகில் பூங்காவும் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதால் ஒரு சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
லாகூர் உயிரியல் பூங்கா
பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூர் உயிரியல் பூங்கா மிகப்பெரியது. 1872 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த உயிரியல் பூங்காதான் தெற்கு ஆசியாவிலேயே பெரியது.
எல்லாவகை வனவிலங்குகள் மற்றும் பறவைகளும் இங்கு நிறைந்துள்ளது. அரசு பூங்கா மற்றும் வனவிலங்குகள் துறையால் இது பராமரிக்கப்படுகின்றன.
எம்ப்ரஸ் சந்தை
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய சந்தை இதுதான். இது பிரிட்டிஷ் அரசர்கள் காலத்திலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது.
கராச்சியில் உள்ள சத்தார் நகரில் இந்த எம்ப்ரஸ் சந்தை நடக்கிறது. இங்கு விற்காத பொருள்கள் இல்லை என்ற கணக்கிலும் அதிக அளவிலும் பிரம்மாண்ட சந்தையாக இருப்பதால் கண்காட்சியாகவும் பயணிகள் தங்களுக்கு தேவையான பொருள்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கும் வாய்ப்பாக உள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாத அச்சமும் நிலவுவதால், சுற்றுலாப் பயணிகளை பயம் உழற்றுகிறது. ரசிகர்கள் மொய்க்காத கலையாக, இங்குள்ள சுற்றுலா தலங்கள் பார்வையாளர்கள் குறைந்து கிடப்பதும் ஒரு அமைதிக்கான பாடமே!
Average Rating