இளவரசர் வில்லியம் – இளவரசி கேட் தம்பதியின் தாஜ் மஹால் விஜயம்…!!

Read Time:2 Minute, 21 Second

tyyyuஇந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் பாரியாரான கேம்பிரிட்ஜ் சீமாட்டியும் (இளவரசி கேட்) நேற்றுமுன்தினம் ஆக்ரா நகரிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

இளவரசர் வில்லியமின் தாயாரான இளவரசி டயானா 1992 ஆம் ஆண்டு தாஜ்மஹாலுக்கு விஜயம் மேற் கொண்டபோது தாஜ்மஹாலுக்கு முன்னால் அமர்ந்து பிடித்துக்கொண்ட புகைப்படம் உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில், இளவரசி டயானாவின் தாஜ்மஹால் விஜயத்தின் நினைவுகளை மீட்டுவதாக இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோரின் தாஜ் மஹால் விஜயம் அமைந்திருந்தது.

முகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக 1631 ஆம் ஆண்டு கட்டி முடித்த தாஜ் மஹால், காதல் சின்னமாக பிரசித்தி பெற்றது.

காதல் திருமணம் செய்த இளவரசர் வில்லியம், கேட் தம்பதியின், தாஜ் மஹால் விஜயம் தொடர்பாக சர்ச்சையொன்றும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது தாஜ்மஹாலின் சில பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்புனரமைப்புக்காக தாஜ் மஹால் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள கவசங்களை அகற்றுமாறு இந்திய அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்படி செய்தால் பல வருடகாலங்களாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புச் செயற்பாடுகள் சீர்குலைந்துவிடும் என சூழலியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும், இவ்வாறான கோரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம்…!!
Next post புளொட் இயக்கத்தை, தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 72) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்