ஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை..!!

Read Time:2 Minute, 2 Second

201604171210226996_Jharkhand-siblings-suffer-from-rare-condition-that-makes_SECVPFஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இரு குழந்தைகள் மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர் போல் உள்ளனர்

ஜார்கண்ட்: மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு வயதானவர்கள் போல் தோன்றும் குழந்தைகளின் பரிதாப நிலை
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இரு குழந்தைகள் வினோத வகை மூப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு வசிக்கும் சத்ருகன் ரஜக் – ரிங்கி தேவி தம்பதியரின் மகள் அஞ்சலி குமாரிக்கு தற்போது ஏழுவயதும், இவரது தம்பி கேசவ் குமாருக்கு ஒன்றரை வயதும் ஆகின்றது. இவர்கள் இருவரும் இந்த வினோத வகை மூப்பு நோயால் பாதிக்கப்பட்டு உடலில் உள்ள தோல் எல்லாம் சுருங்கி, முகம் வீங்கி, மிகவும் வயதானவர்கள் போல் காட்சி அளிக்கிறார்கள். மேலும் இந்த குழந்தைகள் முழங்கால் வலியாலும் அவதிப்படுகிறார்கள்.

மற்ற குழந்தைகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் இவர்கள் ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து சிறுமி அஞ்சலி கூறுகையில், எங்களையும் சாதாரண குழந்தைகள் போல் நடத்த வேண்டும். மற்ற குழந்தைகள் போல் நானும் அழகாக இருக்க விரும்புகிறேன். எங்களை பள்ளியில் தாதி அம்மா ( பாட்டி ) ஓல்டு லேடி பண்டாரியா ( குரங்கு) என அழைப்பது வேதனையாக உள்ளது, என்கிறார்.

இந்த குழந்தைகளை பாதித்துள்ள வினோத வகை முதுமை நோயை டாக்டர்கள், குடிஸ் லக்சா(Cutis Laxa) என்றழைக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியாயம் கேட்ட மனைவியை கொன்று 5 துண்டாக வெட்டிய சமையல் கலைஞர்..!!
Next post ஜெர்மனி: சீக்கிய கோவிலில் குண்டுவெடிப்பு – 3 பேர் காயம்..!!