கம்பீர் 90 ஓட்டங்கள் விளாசல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா..!!

Read Time:2 Minute, 31 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் முன்கள வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் வார்னர் 13 ஓட்டங்களும், ஷிகர் தவான், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 6 ஓட்டங்கள் என நடையை கட்டினர். 50 ஓட்டங்களை கடக்கவே அந்த அணி 10 ஓவர்களை எடுத்துக் கொண்டது.

இதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய நமன் ஓஜா (37), இயன் மார்கன் (51) ஆகியோரால் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களை எட்டியது.

கொல்கத்தா அணி சார்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தவிர மோர்கல் 2 விக்கெட்டும், ரஸல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 143 ஓட்டங்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. தொடக்க வீரர்களாக உத்தப்பா, அணித்தலைவர் கம்பீர் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். உத்தப்பா 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரஸல் (2) நிலைக்கவில்லை.

இருப்பினும் கடைசி வரை பொறுப்புடன் ஆடிய அணித்தலைவர் கம்பீர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் கொல்கத்தா அணி 18.2 ஓவரிலே 2 விக்கெட் மட்டும் இழந்து 146 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

கம்பீர் 60 பந்தில் 90 ஓட்டங்கள் (13 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருடன் மணீஷ் பாண்டே (11) களத்தில் இருந்தார்.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விக்ரம் பிறந்தநாளில் சிறப்பு பரிசு கொடுக்கும் இருமுகன் படக்குழு..!!
Next post பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்ட மரியா ஷரபோவா..!!