எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை மீண்டும் திருப்பி ஒப்படைத்தனர் எல்லை பாதுகாப்பு படையினர்..!!

Read Time:2 Minute, 26 Second

201604160605046469_BSF-Hands-Back-Pakistani-Man-Who-Had-Crossed-Border_SECVPFபாகிஸ்தானை சேர்ந்த முகமது வகாஸ் அக்ரம் என்பவர் பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் கடந்த வியாழக்கிழமை பிடிக்கப்பட்டார். அவர் பாகிஸ்தானின் பவால்நகர் மாவட்டம், பட்டி சாக் கிராமத்தை சேர்ந்தவர்.

மேலும் விசாரித்த போது, வகாஸ் அக்ரம் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைப் பகுதிக்குள் புகுந்து வந்தார் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து எந்தவொரு ஆயுதமும், சந்தேகப்படும்படியான பொருளும் கைப்பற்றப்படவில்லை.

இதனையடுத்து எல்லைப் பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். பின்னர் மனித நேய அடிப்படையில் மீண்டும் அவர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

முன்னதாக 1992-ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்தியாவை சேர்ந்த சிங் என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று அந்நாட்டு சிறையில் உயிரிழந்தார்.

இறந்தவர் தங்கள் நாட்டிற்கு எதிராக உளவு வேளையில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியதோடு, நெஞ்சுவாலி உயிரிழந்ததாக தெரிவித்தது.

இருப்பினும் எல்லை தாண்டி சென்றதற்காக சிறையில் சிங் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவரது உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்த பாகிஸ்தானியர் மீண்டும் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட ஆயுள் வேண்டுமா? இவர் கூறும் ரகசியத்தை கேளுங்களேன்..!!
Next post செல்போனில் செல்பி எடுத்தபோது ரெயில் மோதி மாணவர் பலி..!!