நீண்ட ஆயுள் வேண்டுமா? இவர் கூறும் ரகசியத்தை கேளுங்களேன்..!!

Read Time:2 Minute, 39 Second

downloadநீண்ட ஆயுள் பெறுவதற்கான ரகசியம் என்பது பிறந்தஇடத்தை விட்டு விட்டு வெளியேறாமல் இருப்பதே என செர்னோபில் பகுதியில் குடியிருந்து வரும்முதியவர் தெரிவித்துள்ளாற்.

உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் நகரில் கடந்த30 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர் 90 வயதான இவான் ஷாம்யனோக். கடந்த 1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த அணு விபத்தினையடுத்து இங்குள்ள 100,000 பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

செர்னோபில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது மண் மீது இல்லை என தெரிவிக்கும் இவான், நீண்ட ஆயுள் வேண்டும் என்றால் பிறந்த மண்ணில் இருந்து இடம்பெயர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் தமது மனைவியுடன் தங்கியிருந்த இவரை அதிகாரிகள் பலமுறை நிர்பந்தித்த பின்னரும் இவான் குடும்பம் மட்டும் அங்கிருந்து செல்ல மறுத்துள்ளனர்.

கதிர்வீச்சு பகுதியிலேயே கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இவான் மற்றும் அவரது மனைவிக்கு இதுவரை அதன் தாக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை என கூறும் இவான், மருத்துவர்களே தாம் நலமுடம் இருப்பதை பல முறை உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.

செர்னோபில் விபத்துக்கு பின்னர் வாழ்க்கை முறையில் அத்துணை மாற்றம் எதுவும் வந்து விடவில்லை என கூறும் இவான், தமது தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களையே தினசரி பயன்படுத்தி வருகிறார்.

மாமிசம், பால், முட்டை என தேவைக்கு என்று பன்றி,பசு, கோழி என தமது வீட்டிலேயே வளர்த்து வருகிறார். மனைவி இறந்த பின்னர் தமது பிள்ளைகள் வேறு பகுதிக்கு சென்றதாகவும், தாமும் தமது உறவினர் ஒருவர் மட்டுமே இப்பகுதியில் தங்கி வருவதாகவும் இவான் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்..!!
Next post எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை மீண்டும் திருப்பி ஒப்படைத்தனர் எல்லை பாதுகாப்பு படையினர்..!!